தாராவியில் வேகமாக பரவும் கொரோனா, செய்வதறியாது திகைக்கும் அரசு.!
தாராவியில் வேகமாக பரவும் கொரோனா, செய்வதறியாது திகைக்கும் அரசு.!

இந்தியாவிலேயே அதிகப்படியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 149 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மும்பை மாநகரில் உள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசை பகுதியாக கருதப்படும் தாராவியில் இன்றுவரை 47 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு 5 பேர் உயிரிழப்பு என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராவியில் ஞாயிறன்று 19 பேருக்கும், இன்று காலை நான்கு பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் ஒருவர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசார் அந்த பகுதியில் தீவிர கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர், தாராவியில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் 9 கண்டைன்மெண்ட் மண்டலங்கள் அமைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/OpIndia_com/status/1249600709588180992?s=19