Begin typing your search above and press return to search.
சிவலிங்கம் வடிவில் தீபம் ஏற்றி இருளை அகற்றிய தருமபுரம் ஆதீனம்
சிவலிங்கம் வடிவில் தீபம் ஏற்றி இருளை அகற்றிய தருமபுரம் ஆதீனம்

By :
பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதை அடுத்து, இன்று இரவு 9 மணிக்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இல்லங்களில் மின் விளக்குகளை அணைத்து தீபம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றினர்.
அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், குடிசை வாழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் இதை பின்பற்றி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். ஆன்மீக ஸ்தலங்களிலும் இது கடைபிடிக்கப்பட்டது. அந்த வகையில் தருமபுரம் ஆதீன மடத்திலும் இரவு 9 மணிக்கு விளக்குகள் ஏற்றப்பட்டன.
ஆதீன மடத்தின் வளாகத்தில் பெரிய சிவலிங்கம் வடிவில் விளக்குகள் ஏற்றப்பட்டன. ஆதீன வளாகம் முழுவதும் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு விளக்குகள் ஏற்றப்பட்டன.
ஸ்ரீலஸ்ரீ மஹாசந்நிதானங்கள் அவர்கள் தங்கள் திருக்கரங்களால் விளக்கு ஏற்றினார். நாடு முழுவதும் உள்ள பல ஆன்மீக ஸ்தலங்களிலும் விளக்குகள் ஏற்றப்பட்டன.
Next Story