வெளியாட்களுக்கு அனுமதி இல்லை.. சாலையில் தடுப்பு அமைப்பு.. அசத்தும் தர்மபுரி கிராம மக்கள்.!
வெளியாட்களுக்கு அனுமதி இல்லை.. சாலையில் தடுப்பு அமைப்பு.. அசத்தும் தர்மபுரி கிராம மக்கள்.!

தர்மபுரி மாவட்டம் முழுவதும் கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு அனைவரிடத்திலும் சென்று சேர்ந்துள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி 21 நாட்கள் ஊரடங்கை பின்பற்றினால் கொரோனா பாதிப்பை தடுக்க முடியும் என்று கூறினார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் கர்நாடக, கேரளா போன்ற மாநிலங்களில் வேலைக்கு சென்றுவிட்டு தற்போது சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து வருகின்றது.
மேலும், மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் தாங்களாகவே மக்கள் முன்வந்து கிராம சாலைகளில் தடுப்பு அமைத்துள்ளனர்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாலவாடி கிராமத்தில் உள்ள பாப்பாரப்பட்டி டூ இண்டூர் சாலையை தடுப்பு அமைத்துள்ளனர்.
இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் கிராமங்களில் நுழைய முடியாது. மேலும், வெளியாட்களை யாரும் அனுமதிப்பதில்லை.
அதே போன்று பாப்பாரப்பட்டி அருகே உள்ள சிட்லகாரம்பட்டி, பள்ளிப்பட்டி பஞ்சாயத்து போன்ற கிராமங்களில் உள்ள சாலையை முற்றிலும் தடுப்பு அமைத்துள்ளனர்.
இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்களை தடுக்க முடியும். தங்கள் கிராமங்களில் 21 நாட்கள் யாரும் வெளியாட்களை அனுமதிப்பதில்லை என்று அனைவரும் சபதம் ஏற்றுள்ளனர்.
இதே போன்ற ஊரடங்கு உத்தரவை தமிழகம் முழுவதும் பின்பற்றினால் கண்டிப்பாக கொரோனாவை தடுக்க முடியும் என்பதில் மாற்று கருத்து இல்லை.