கொரோனா நெருக்கடி நிலையிலும் இந்து மக்களுக்கு வேற்றுமை காட்டும் பாகிஸ்தான் அரசு - இந்தியாவின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கும் அவலம்!
கொரோனா நெருக்கடி நிலையிலும் இந்து மக்களுக்கு வேற்றுமை காட்டும் பாகிஸ்தான் அரசு - இந்தியாவின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கும் அவலம்!

கொரோனா எதிரொலியாக பாகிஸ்தான் நாடு முழுவதும் முடக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை உள்ளது. இந்த சூழ்நிலையிலும் அங்கு இந்துக்களுக்கு எதிரான வேற்றுமை தொடருகிறது.
பாகிஸ்தானின் சிந்த் பகுதியில் 5 லட்சத்திற்கும் அதிகமான இந்து மக்கள் வசித்து வருகின்றனர். இதேபோன்று அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 4 சதவீதத்தினர் இந்துக்களாக உள்ளனர். பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களாக இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.
அங்கு தொடர்ச்சியாக இந்துக்களுக்கு எதிரான வேற்றுமை மற்றும் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.
எங்களது அண்டை வீடுகளில் வசிப்போர் எல்லாம் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். நாடு முடக்கப்பட்டு உள்ள நிலையில், எங்களுக்கு அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன என்கிறார், கராச்சி நகரில் வசிக்கும் இந்து சமூக உறுப்பினர் ஒருவர்.
வீட்டில் உணவு இல்லை. உணவு வாங்க பணமும் இல்லை. எங்களின் அன்றாட வாழ்க்கையும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உள்ளது. எங்களுக்கு உள்ள சங்கடங்களை பற்றி இதுவரை ஒருவரும் எதுவும் கேட்டு கொள்ளவில்லை என கிறிஸ்துவ சமூக உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்திய அரசாங்கம் ராஜஸ்தான் வழியே சிந்து பகுதிக்கு உணவு அனுப்பி வைக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள நெருக்கடி நிலையை தவிர்க்க காலதாமதம் செய்யாமல், இந்திய பிரதமர் மோடி மற்றும் ஐ.நா. அமைப்பு தலையிட வேண்டும் என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.