பிரசாந்த் கிஷோர் மற்றும் ஸ்டாலினை வெளுத்து வாங்கிய - அமைச்சர் ஜெயக்குமார்!
பிரசாந்த் கிஷோர் மற்றும் ஸ்டாலினை வெளுத்து வாங்கிய - அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை ராயபுரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மோசடிக்காரர்கள்! மோசடிக்காரர்கள் உடன் தான் சேருவார்கள் என்பதற்கு பிரசாந்த் கிஷோரும் ஸ்டாலினும் உதாரணம் என மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
திமுகவை இப்பொழுது வழிநடத்திக் கொண்டிருக்கும் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது பீகார் காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என நான் செய்தித்தாளில் படித்ததாகவும்,சர்க்காரியா கமிஷன் குற்றவாளி யார் என்று தெரியும், விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்தவர்கள் யார் என்று எளிதாக அனைவரும் கூறி விடுவார்கள், இனம் இனத்தோடு சேரும் என்று சொல்லுவார்கள் அதேபோல 420 - 420 உடன் தான் சேரும், 420 மற்றும் 406 தமிழ் நாட்டை மாற்ற முடியுமா? எத்தனை 420 வந்தாலும், எத்தனை 406 வந்தாலும் எங்களைப்போன்ற ஏகே 47 முன்னாள் எதுவும் செய்ய முடியாது எனத் தெரிவித்தார்.