Kathir News
Begin typing your search above and press return to search.

மூழ்கும் கப்பலில் ஓட்டம் பிடிக்கும் எலிகள் - தி.மு.க ஐடி விங் ஆட்களின் ஓட்டம், கலங்கி நிற்கும் அறிவாலயம்.! #DMK #DMKITwing #MKstalin #Udhayanithi

மூழ்கும் கப்பலில் ஓட்டம் பிடிக்கும் எலிகள் - தி.மு.க ஐடி விங் ஆட்களின் ஓட்டம், கலங்கி நிற்கும் அறிவாலயம்.! #DMK #DMKITwing #MKstalin #Udhayanithi

மூழ்கும் கப்பலில் ஓட்டம் பிடிக்கும் எலிகள் - தி.மு.க ஐடி விங் ஆட்களின் ஓட்டம், கலங்கி நிற்கும் அறிவாலயம்.! #DMK #DMKITwing #MKstalin #Udhayanithi

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 July 2020 11:40 AM GMT

ஓர் கட்சியின் முன்னேற்றம் என்பது அந்த கட்சியில் புதிதாக இணையும் நபர்களையும், கட்சியின் விவாதம் ஏற்படுத்தும் தாக்கத்தையும் வைத்து அந்த கட்சியின் வளர்ச்சியை அறியலாம். மாறாக கட்சியின் வீழ்ச்சியை அந்த கட்சியில் இருந்து ஓட்டம் பிடிக்கும் நபர்களை வைத்தே கணக்கிடலாம். அந்த வகையில் தி.மு.க'வை இரண்டாம் வகையில் சேர்க்கலாம். மூழ்கும் கப்பலில் தப்பிப்பிழைக்கும் எலிகள் போல சிதறும் தகவல் தொழில்நுட்ப அணியினர்.

திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் நிர்வாகிகளாக இருந்த பலர் தங்களுக்கு அந்த பதவி வேண்டாம் என்று தலைமைக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கும் தகவல்கள் கசிந்துள்ளது.

தி.மு.க'வில் இளைஞர் அணிச் செயலாளர் பதவிக்கு இணையாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. இந்த பதவியில் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜனின் மகனும் எம்.எல்.ஏவுமான பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டார். தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு மிகவும் நெருக்கம் என்கிற அடிப்படையில் இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் கலைஞர் இருக்கும் போதே அண்ணா அறிவாலயத்தில் பழனிவேல் தியாகராஜனுக்கு தனியாக அறை ஒதுக்கப்பட்டது. அந்த அளவிற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவி முக்கியத்துவம் பெற்றது.

பதவியை பெற்ற கையோடு தி.மு.கவின் மற்ற அணிகளுக்கு இணையாக கிளைக்கழகம் வரை நிர்வாகிகள் நியமிக்கும் பணிகளை முடுக்கிவிட்டார் தியாகராஜன். மாவட்ட அளவில் தகவல் தொழில்நுட்ப அணி, ஒன்றிய அளவில் அணி, சட்டமன்ற தொகுதி அளவில் அணி என இறுதியாக ஊராட்சி அளவிலும் கூட தகவல் தொழில்நுட்ப அணிகளை உருவாக்கி தி.மு.கவின் ஐடி விங்கை வலுப்படுத்தினார் தியாகராஜன். இதற்கு தி.மு.க தலைமையின் முழு ஒத்துழைப்பு இருந்த காரணத்தினால் பழனிவேல் தியாகராஜன் நிர்வாகிகள் நியமனத்தில் மிகத் தீவிரமாக செயல்பட்டார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கிட்டத்தட்ட இந்த பணிகளை முடித்த பழனிவேல் தியாகராஜன் சட்டமன்ற தேர்தலுக்கு சரியாக இருக்கும் என்று கருதி கடந்த சில மாதங்களாக நிர்வாகிகள் மாற்றம், புதியவர்களுக்கு வாய்ப்பு என்று பணிகளை தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் திடீரென தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பரவலாக ஒன்றிய அளவிலான தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியின் நிர்வாகிகள் தங்களுக்கு பதவி வேண்டாம் என்று கூறி தலைமைக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர. இதற்கு தனிப்பட்ட காரணங்களை கூறி அவர்கள் கடிதங்களை அனுப்பி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக இப்படி வந்த ஏராளமான கடிதங்கள் தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் தகவல் தொழில்நுட்ப அணி மூலமாகத்தான் ஊராட்சி அளவில் சமூக வலைதள பிரச்சாரத்தை முன்னெடுக்க தி.மு.க தலைமை முடிவெடுத்திருந்தது. இந்த நிலையில் நிர்வாகிகள் திடீர் விலகல் தி.மு.க தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பதவியில் இருந்து விலகும் கடிதம் கொடுத்த நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்திற்கே தியாகராஜன் நேரில் வரவழைத்து காரணத்தை கேட்டுள்ளார். ஆனால் தங்கள் பதவி விலகல் முடிவில் சிலர் உறுதியாக இருந்துள்ளனர்.

இதனை அடுத்து வேறு வழியின்றி அவர்களை தங்கள் பதவிகளில் இருந்து விடுவித்துவிட்டு புதியவர்கள் நியமிக்கும் பணியை நேற்று முதல் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி தொடங்கியுள்ளது.

இதுபற்றி சமீபத்தில் விலகிய தகவல் தொழில்நுட்ப நிர்வாகியிடம் மேலும் விசாரித்த பொழுது, "இதுல உள்நோக்கம் ஒன்னும் இல்லைங்க. கட்சி செயல்பாடுகள் மேல நம்பிக்கை இல்லை, லோக்கல் நிர்வாகிங்க எங்கள மதிக்குறது இல்லை. நாங்களா எதாவது கேட்க போனா உங்களுக்கு ஏன் தம்பி இதெல்லாம்'ன்னு வேண்டா வெருப்பா பேசுறாங்க! இது பரவால்லை கட்சிலதான் மரியாதை மற்றும் தகவல் கிடைக்கலயே'ன்னு நாங்களா குழுக்கள் உருவாக்க முயற்சி பண்ணா ஆட்கள் கிடைக்க மாட்டேங்குறாங்க. ரொம்ப டீசண்டா தி.மு.க'ன்னா வேணாம் ப்ரோ'ன்னு சிம்பிள முடிச்சுட்டு போய்டுறாங்க. கட்சிலையும் மரியாதை இல்லை, எங்களாலயும் தனியா இயங்க முடியலை அப்புறம் என்னங்க இங்க பன்றது உருப்படியா வேற ஏதுவாது பண்ணலாம்'ன்னு விலகிட்டேன்" என்று முடித்துக்கொண்டார்.

நவ துவாரத்திலும் தி.மு.க தலைமைக்கு புகை வந்தாலும் ஆளும் மத்திய, மாநில அரசுகளை குறை சொல்வதில் மனதை ஆசுவாசப்படுத்தி கொள்கின்றனர் தலைமை குடும்பத்தினர்.

Next Story