Kathir News
Begin typing your search above and press return to search.

கந்த சஷ்டி அவமதிப்புக்கு அமைதி, பக்ரீத் பண்டிகைக்கு முதல் நாளே வாழ்த்து - தி.மு.கவின் சமூக நீதி.! #DMK #Karupparkootam #HindhuPeople

கந்த சஷ்டி அவமதிப்புக்கு அமைதி, பக்ரீத் பண்டிகைக்கு முதல் நாளே வாழ்த்து - தி.மு.கவின் சமூக நீதி.! #DMK #Karupparkootam #HindhuPeople

கந்த சஷ்டி அவமதிப்புக்கு அமைதி, பக்ரீத் பண்டிகைக்கு முதல் நாளே வாழ்த்து - தி.மு.கவின் சமூக நீதி.! #DMK #Karupparkootam #HindhuPeople

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2020 3:02 AM GMT

கந்த சஷ்டி அவமதிப்பு விவகாரத்தில் அமைதி காத்த தி.மு.க இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத்'க்கு முதல் நாளே முந்திக்கொண்டு வாழ்த்து சொல்லியுள்ளது.

கறுப்பர் கூட்ட கந்த சஷ்டி அவமதிப்பு விவகாரத்தில் அனைத்து தரப்பினரும், அனைத்து அரசியல் தலைவர்களும் தங்களின் கருத்தை கூறினர். முக்கியமாக பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் மற்றும் அவரது குடும்பத்தினரும், கட்சியினரும் அமைதி காத்தனரே தவிர கண்டனமோ, கருத்தோ தெரிவிக்கவில்லை மேலும் மேலும் விவகாரம் முற்றி தி.மு.க'வின் தகவல் தொடர்பு அணி இதன் பிண்ணனி என்கிற விஷயம் வெளிவந்த வேளையில் இதுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என பெயரளவில் அறிக்கை மட்டும் தி.மு.க தலைவரிடம் இருந்து வந்தது. மற்றபடி சில எம்.எல்.ஏ'க்கள் மாத்திரம் எங்கே நாம் ஓட்டு கேட்டு செல்லும் பொழுது இதை குறிபிட்டு இந்து மக்கள் விரட்டியடிப்பார்களோ என்று பயந்து 'நாங்கள் இந்துக்கள் எதிரியல்ல' என்ற அறிவிப்பு சுவரொட்டிகள் ஆங்காங்கே தமிழகத்தில் தென்பட்டன.

இந்த நிலையில் இன்று பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகை இன்றைய இந்த பண்டிகைக்கு நேற்றே தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து கூறி விட்டார். மேலும் அவரது குடும்பத்தினரும்,கட்சியினரும் வாழ்த்து கூறிவிட்டனர்.

இந்துக்கள் கடவும் அவமதித்தால் இம்மியளவு கூட கண்டுகொள்ளாத ஸ்டாலின் இஸ்லாமியர்கள் பண்டிகையன்று மட்டும் முதல் நாளே முந்திக்கொண்டு வாழ்த்து கூறியது இந்து சமுதாய மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை இந்து சமுதாய ஓட்டு வேண்டாம் என்று தி.மு.க முடிவு செய்துவிட்டது போலும்.

Next Story