கடவுள் பல்லக்கை தோளில் சுமந்த தி.மு.க எம்.எல்.ஏ! நாடகத்தின் உச்சம்!
கடவுள் பல்லக்கை தோளில் சுமந்த தி.மு.க எம்.எல்.ஏ! நாடகத்தின் உச்சம்!

கடவுள் இல்லை என்று சொல்லிக்கொள்ளும் தி.மு.கவின் இரட்டை வேடம் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.எ அன்பில் மகேஷ் கடவுள் செல்லும் பல்லக்கை தோளில் சுமந்து செல்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி போலவே, அவரது மகன் ஸ்டாலினும் தொடர்ந்து இந்து கடவுள்களையும், பழக்க வழக்கங்களையும் கிண்டல் செய்து விமர்சிப்பார்.
பிரச்சாரங்களில் செல்லும் போது பொது மக்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைப்பதை ஸ்டாலின் பின்னர் பொதுவெளியிலேயே அழித்து விடுவார்.
ஆனால் அவரின் மனைவி துர்கா கோவிலுக்கு அடிக்கடி சென்று வழிபடுவார். அந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும்.
இந்த தருணத்தில் திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் திருச்சி கோவில் விழாவில் கலந்து கொண்டு சுவாமியின் பல்லக்கை தோளில் சுமந்து வந்தார். இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இதனை பற்றி தி.மு.க ஆதரவும் மற்றும் எதிர்ப்பும் அன்பில் மகேஷுக்கு தெரிவித்து வருகிறது. இந்த புகைப்படம் பழையது என்றும் எடிட் செய்யப்பட்டது என்றும் கூறி வருகிறார்கள்.
SOURCE:- https://www.dinamalar.com/news_detail.asp?id=2502942