Kathir News
Begin typing your search above and press return to search.

எதற்கு விளக்கு ஏற்ற மோடி கூறினார் என்பதை கூட புரிந்து கொள்ளாமல், வழக்கம் போல பொங்க ஆரம்பித்த தி.மு.க வினர்..

எதற்கு விளக்கு ஏற்ற மோடி கூறினார் என்பதை கூட புரிந்து கொள்ளாமல், வழக்கம் போல பொங்க ஆரம்பித்த தி.மு.க வினர்..

எதற்கு விளக்கு ஏற்ற மோடி கூறினார் என்பதை கூட புரிந்து கொள்ளாமல்,  வழக்கம் போல பொங்க ஆரம்பித்த தி.மு.க வினர்..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 April 2020 7:50 AM GMT

கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கு ஏத்துவதால் அறிவியல் பூர்வமாக எந்த பலனும் இல்லை அது மூடநம்பிக்கைக்கு வழிவகுத்து விட கூடாது என தனது பகுத்தறிவு பிரசாரத்தை துவங்கியுள்ளார்.

தி.மு.க. தனது அரசியல் பிரசாரத்துக்கு கொரானா வைரஸ் நோய் தொற்றுக்கு எதிராக போராடும் அனைவரின் ஒற்றுமையையும் காட்டும் இந்த நிகழ்வையும் பயன்படுத்தி மக்களை குழப்பி திசைதிருப்பி ஆள் பிடிக்கும் வேலையை குமரி மாவட்டத்தில் இருந்து துவங்கியுள்ளது.

தீபம் என்பது இறைவனின் அம்சம். வீட்டில் தீபம் ஏற்றுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனவரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும் என்பது முத்தோர் கூற்று. அதிலும் மோடி கூறியது 130 கோடி மக்களை ஒன்றிணைக்க, இதில் அறிவியல் பின்னணி இல்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்போம் என காட்டவே. அதை கூட புரிந்துகொள்ளாமல் வழக்கம் போல பொங்க ஆரம்பித்துள்ளனர் உடன் பிறப்புக்கள் என குமரி மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News