Kathir News
Begin typing your search above and press return to search.

21 பவுன் நகைகளை தர மறுத்து நண்பரையே ஏமாற்றிய தி.மு.க நகர செயலர் - பக்காவா ஆசை காட்டி ரியல் எஸ்டேட் பெரும்புள்ளியை சாய்த்த மோசடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jun 2020 1:18 PM GMT

நண்பரிடம் பெற்ற, 21 பவுன் நகைகளை தர மறுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக, தி.மு.க., நகர செயலர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைவாசல், வீரகனூர், சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் சார்லஸ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரும் வீரகனூர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த அழகுவேல் என்பவரும் நண்பர்கள்.

அழகுவேல் தி.மு.க.,வின் வீரகனூர் நகர செயலர் பதவி வகித்து வருவதோடு, தனியாக பால் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில், ஆறு ஆண்டாக, சார்லஸ் மேலாளராக பணிபுரிந்தார். பால் நிறுவனத்தை விரிவுபடுத்த, சார்லஸிடம், அழகுவேல் பண உதவி கேட்டார். அவரம் நம்பி 21 பவுன் நகையை கொடுத்துள்ளார்.

ஐந்து மாதத்துக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மேலாளர் பணியை விட்டு, சார்லஸ் வெளியேறினார். கடந்த மார்ச், 3ல், வீட்டுக்கு வந்த அழகுவேலிடம், தொழில் விருத்திக்கு, கொடுத்த நகையை திரும்ப கேட்டார்.

அதில், வாக்குவாதம் ஏற்பட, சார்லஸை தாக்கிய அழகுவேல், கொலை மிரட்டல் விடுத்தார். இதனால், உறவினர் வீட்டில், சார்லஸ் தஞ்சமடைந்ததோடு, ஊரடங்கால் ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது வீடு திரும்பிய அவர், நகையை தரமறுத்து, அழகுவேல் மிரட்டியதாக அளித்த புகார்படி, வீரகனூர் போலீசார், நேற்று முன்தினம், அழகுவேல் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Next Story