Kathir News
Begin typing your search above and press return to search.

போஸ்டர்‌ அடித்து இந்துக்களை சமாதானப்படுத்த முயலும் தி.மு.க - வேலன் வெச்சான்டா வேட்டு.!

போஸ்டர்‌ அடித்து இந்துக்களை சமாதானப்படுத்த முயலும் தி.மு.க - வேலன் வெச்சான்டா வேட்டு.!

போஸ்டர்‌ அடித்து இந்துக்களை சமாதானப்படுத்த முயலும் தி.மு.க - வேலன் வெச்சான்டா வேட்டு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2020 3:00 AM GMT

சனாதனத்தை வேரறுப்போம் என்று மாநாடெல்லாம் போட்ட பகுத்தறிவு பகலவன்களை 'தி.மு.க இந்துக்களுக்கு விரோதி அல்ல' என்று போஸ்டர் அடித்து ஒட்டும் நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டது முருகப்பெருமானின் வேல். எத்தனை முறை எப்படி எல்லாமோ இந்துக் கடவுள்களையும் இந்துக்களின் மத நம்பிக்கைகளையும் திமுகவின் தாய் கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்த பெரியாரில் இருந்து தற்போது இலவு காத்த கிளியாக முதல்வர் பதவிக்கு காத்துக்கொண்டிருக்கும் மு.க ஸ்டாலின் வரை இழிவுபடுத்தாத தி.மு.க தலைவர்களே இல்லை எனலாம்.

பல்வேறு சம்பவங்களில் தி.மு.கவின் இந்து விரோத போக்கு வெளிப்பட்டாலும் அது மக்களிடையே அவ்வளவாக சென்று சேராமலும் தாக்கத்தை ஏற்படுத்தாமலும் இருந்தது. ஆனால் கந்தனின் வேலை இழிவுபடுத்திப் பேசிய கறுப்பர் கூட்டத்திற்கு பின் கயவாளி தி.மு.க தான் இருக்கிறது என்று தெரிய வந்ததும் தி.மு.க மீதான இந்துக்களின் எண்ணமும் மாறி விட்டதாகத் தெரிகிறது. கட்சியில் இருக்கும் இந்துக்களுக்கு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லாமல் தவிர்ப்பதும் இந்து மதத்தை மட்டும் விமர்சிப்பதும் என்ன தான் சங்கடமாக இருந்தாலும் அரசியலுக்காக கண்டும் காணாமல் இருந்து வந்தனர். ஆனால் கந்த சஷ்டி விஷயத்தில் தி.மு.கவின் மௌனம் மற்றும் திரைக்குப் பின்னால் உதவும் வழக்கம் சொந்தங்களிடம் கூட ஓட்டுக் கேட்டு போக முடியாதோ என்று அச்சப்பட வைத்து விட்டது போலும்.

இதன் எதிரொலியாகத் தான் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் ‌டேமேஜ் கன்ட்ரோல் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்களா என்ன என்று தெரியவில்லை. பெரும்பாலான இந்துக்களின் கல்வி உரிமைக்கு போராடியது தி.மு.க தான் என்கிறார்கள். பிராமணர்கள் மட்டுமே கல்வி கற்றதாகவும் பிற சாதியினருக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டதாகவும் புளுகுவதும் வார்த்தைக்கு வார்த்தை சூத்திரன் என்று பிராமணரல்லாதோரை குறிப்பிட்டு அவமானப்படுத்தி விட்டதாக ஆனந்தப்படுவதும் தான் தி.மு.கவினரின் வழக்கம். இதை பொய் என்று நிரூபிக்க பல தரவுகள் இருக்கின்றன. எனினும் கீழே உள்ள 1900களில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தைப் பாருங்கள். பூணூல் அணியாதவர்களும் கல்வி கற்கின்றனர்.


திமுக தோன்றுவதற்கு முன் சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த இந்துக்களின் சுயமரியாதைக்காக போராடவே ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தி.மு.க என்கிறார்கள். இவர்களுக்கு தெரிந்த சுயமரியாதை எல்லாம் பன்றிக்கு பூணூல் அணிவித்து ஒரு சனாதன தர்ம வழக்கத்தை இழிவுபடுத்துவது தான். ஆனால் அந்தக் காலத்தில் தீட்சை பெற்ற அனைவருமே பூணூல் அணிந்திருந்தனர் என்பதையும் சுயமரியாதை ஒன்றும் திமுகவின் அப்பன் வீட்டு சொத்து அல்ல என்பதையும் கீழே இருக்கும் புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


இந்து சமய அறநிலையத்துறையை இந்தியாவிலேயே முதன்முதலாக தொடங்கியவர் கலைஞர் தானாம். இந்து அறநிலையத்துறை கோவில் பணத்தை நொறுக்குத்தீனி வாங்கவும் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட பயன்பாட்டுக்காக சொகுசு கார் வாங்கவும் முறையற்ற வகையில் செலவழிப்பதைக் கேள்வி கேட்டு நேற்று கூட நீதிமன்றம் தலையில் குட்டி இருக்கிறது. சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஸ்ரீராமரின் பெயரைத்தான் சூட்டவேண்டும் என்று வேறு கலைஞர் சொன்னாராம். "ராமர் என்ன இஞ்சினியரா சேது பாலம் கட்டுவதற்கு" என்று கருணாநிதி நக்கலாக கூறியதை இந்துக்கள் மறந்திருப்பர் என்று தி.மு.க நினைத்தால் அது தவறு.

1500க்கும் மேற்பட்ட கோவில்களை புனரமைத்து தி.மு.க கும்பாபிஷேகம் செய்ததாக வேறு சொல்லிக் கொள்கிறார்கள். இந்து அறநிலையத் துறையை அமைத்து கோவில் சொத்துக்களை கொள்ளையடித்தது போதாதென்று ஏதோ தங்கள் சொந்த பணத்தில் கும்பாபிஷேகம் செய்ததுபோல் வாய்கூசாமல் பேசுகிறார்கள் இந்த பொய்யர்கள். 88% இந்துக்களுக்கு போராடி இட ஒதுக்கீடு வாங்கித் தந்தாராம் பெரியார். அடுத்தவன் சட்டையை திருடிப் போட்டுக் கொள்வதில் தான் என்னே சுகம்! அம்பேத்கர் செய்த பணிக்கு உரிமை கொண்டாடுவதற்கு வெட்கமாக இல்லை? ஆக மொத்தம் போஸ்டர் அடித்து இந்து வாக்குகளை காப்பாற்றுகிறேன்‌ என்று உங்கள் தலையில் நீங்களே மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறீர்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News