எனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு எதுவும் வேண்டாம்! இன்று தன்னை சந்தித்த துணை ஆணையரிடம் ரஜினிகாந்த் மறுப்பு!
எனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு எதுவும் வேண்டாம்! இன்று தன்னை சந்தித்த துணை ஆணையரிடம் ரஜினிகாந்த் மறுப்பு!

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக அவர் அந்த சட்டத்தால் தமிழக முஸ்லிம்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றும், ஏற்பட்டால் முதல் ஆளாக வந்துப் போராடுவதாகத் தெரிவித்தார். பின்னர் தில்லி வன்முறைச் சம்பவங்களை உளவுத்துறை இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்த தவறியதாக பாஜக அரசை குறை கூறியதுடன் இதற்காக பாஜக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என பேசியது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனால் இரு தரப்பு எதிர்ப்புகளால் ரஜினி காந்துக்கு சங்கடங்கள் எதுவும் எதுவும் ஏற்படுமோ என தமிழக அரசு கருதிய நிலையில், நடிகர் ரஜினிகாந்துடன், காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு திடீரென சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் தனது வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என ரஜினிகாந்த் மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.