Kathir News
Begin typing your search above and press return to search.

உங்கள் வீட்டில் மகாலஷ்மி நிரந்தர வாசம் செய்ய வேண்டுமா?

உங்கள் வீட்டில் மகாலஷ்மி நிரந்தர வாசம் செய்ய வேண்டுமா?

உங்கள் வீட்டில் மகாலஷ்மி நிரந்தர வாசம் செய்ய வேண்டுமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2019 6:09 AM GMT


நமது இல்லத்திற்கு தினசரி தேவர்களும், செல்வத்தின் அதிபதியான மஹா லட்சுமியும் வருவதாக ஐதீகம்.நம் வீட்டிற்கு சாதாரணமாக
யாராவது விருந்தாளி வருவதாக இருந்தாலே வீட்டை அலங்கரிக்க
ஆசைப்படுவோம்.அப்படியிருக்க, நமக்கு வரங்களை அருளும் தேவாதி தேவர்களும், செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி
தேவியும் நம் இல்லத்திற்கு வரும் போது அவர்களை நாம் எந்த விதத்தில் வரவேற்க
வேண்டும் என்ற வழிமுறையை தெரிந்துக் கொள்ள வேண்டாமா?


கோலமிடும் வீட்டில் மகாலஷ்மி நிரந்தரமாக வாசம் செய்கிறாள் என்று நம்முடைய
சாஸ்திரம் சொல்கிறது. சூரிய உதயத்திற்கு முன் வாசலில் சாணம் தெளித்து கோலமிடுவது ஐஷ்வர்யத்தை கொண்டு வரும். குறிப்பாக காலையில் வீட்டில்
இருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பு கோலமிடுதல் நலம்.அவசரத்தில், கோலத்தில் ஏதேனும் தவறு ஏற்பட்டு
விட்டால் காலினால் அழிக்காமல், கையால் சரி செய்ய வேண்டும்.


பச்சரிசி மாவில் கோலமிடும் போது, அது எறும்பு, ஈ போன்ற சிறிய உயிரினங்களுக்கு உணவாக அமையும். அதனால் கோலமிடுதலை,ஒரு சடங்காக,சம்பிரதாயமாக மட்டும் எண்ணாமல்,ஜீவகாருண்யதிற்கான வழியாகவும்
பார்க்கலாம்.


.


வீட்டின் வெளிமுற்றம், அன்னம் செய்யும் சமையல்அறை, பசுவின் கொட்டகை, துளசிமாடம், பூஜை அறை ஆகியவை கோலமிடுவதற்கான ஏற்ற இடம். கோலத்தை
அமர்ந்தவாறு போடக் கூடாது. குனிந்து பெருக்கி, கோலமிடுதல் இடுப்புப் பகுதிக்கு ஒரு நல்ல பயிற்சியை
கொடுப்பதோடு, ஆரோக்கியத்தை
அதிகரிக்க செய்யவல்லது. பசு சாணம் ஒரு நல்ல கிருமிநாசனியாக விளங்குகிறது. பசு
சாணம் மற்றும், அதிகாலை நேர சுத்தமான பிராண வாயு, நமக்கு நோயற்ற நீண்ட ஆரோக்கியமான வாழ்வினை அளிக்கும்.


ஆதலால் நம் முன்னோர்கள் ஏற்படுத்திச் சென்றுள்ள நல்ல பழக்கவழக்கங்களை நாமும்
பின்பற்றி நமது தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News