யாரும் வெளியே வர வேண்டாம், நடிகர் வடிவேலு உருக்கமான வீடியோ!
யாரும் வெளியே வர வேண்டாம், நடிகர் வடிவேலு உருக்கமான வீடியோ!

கொரோனா வைரஸை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் நடிகர் வடிவேலு உருக்கமாக யாரும் வெளியே வரவேண்டாம் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது. மனசு வேதனையோடு வருத்தத்தோடு சொல்வதாகவும், தயவு செய்து அனைவரும் அரசாங்கம் சொல்லும் அறிவுரையின் படி சில நாட்களுக்கு வீட்டிலேயே இருக்கலாம், மருத்துவ உலகமே நிரம்பி, தன் உயிரைப் பணயம் வைத்து எல்லோரும் உயிரையும் காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
#StayHomeStaySafe #Vadivelu emotional advice 😥 #VadiveluForLife #CoronavirusLockdown #Corona #CoronaVirusUpdates pic.twitter.com/UgP09mSBEj
— KollywoodNagar (@KollywoodNagar) March 26, 2020
அதுபோல காவல்துறை அதிகாரிகள், நம்மை பாதுகாப்பதற்கு கையெடுத்து, கெஞ்சிக் யாரும் வெளியே வர வேண்டாம் கேட்கின்றனர். யாருக்காக இல்லையோ நம்ம வருங்கால, வம்சாவளி காக, நம் பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக நாம் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும், இதை யாரும் அலட்சியமாக இருக்காதீர்கள்! ரொம்ப பயங்கரமா இருக்கு! என கண்ணீர் மல்க, உருகி யாரும் வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.