Kathir News
Begin typing your search above and press return to search.

ஊடகங்கள் நெருப்புடன் மோத வேண்டாம்! உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் எச்சரிக்கை.!

ஊடகங்கள் நெருப்புடன் மோத வேண்டாம்! உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் எச்சரிக்கை.!

ஊடகங்கள் நெருப்புடன் மோத வேண்டாம்! உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் எச்சரிக்கை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Nov 2019 5:34 AM GMT


தேசிய பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் பல ஊடகங்கள், அரசியல் விமர்சகர்கள் இந்திய அரசியல் வரலாறு தெரியாமல் கண்டபடி பேசியும், எழுதியும் மக்களை தவறாக திசை திருப்ப முயன்று வருகின்றனர், இவர்களை நெருப்போடு மோத வேண்டாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடுமையாக எச்சரித்துள்ளார்.


டெல்லியில் தாலுக்தார் எழுதிய ‘POST- COLONIAL ASSAM’ (1947-2019) என்ற நூலினை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வெளியிட்டார். இந்த புத்தகம் ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு பிறகு இன்றைய நாள் வரை அஸ்ஸாமின் நிலைமைகள் குறிப்பாக வங்கதேச அகதிகள் பிரச்சினையால் பூர்வீக குடிமக்களுக்கு ஏற்பட்ட வாழ்வியல் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் பற்றி குறிப்பிடுவதாகும்.


இந்த நூல் பற்றி கோகோய் கூறுகையில் “ அஸ்ஸாம் மக்களின் பிரச்சனைகளை உள்ளபடி சுட்டுக் காட்டுகின்ற புத்தகம் இதுவாகும், இந்த பிரச்சனைகளை முறையுடன் தீர்க்க தேசிய குடிமக்கள் ஆவணப்பதிவு (என்.ஆர்.சி) முறையை மத்திய அரசு சிறந்த முறையில் பாரபட்சமில்லாமல் செயல்படுத்தி வந்தாலும் பல ஊடகங்கள், அரசியல் விமர்சகர்கள் அரசியல் நோக்கத்துடன் பார்ப்பதாகவும், அவர்கள் யதார்த்தங்களை புரிந்து கொள்ளாமல், தவறான செய்திகள், பிம்பங்கள் மூலம் தேசிய அளவில் மக்களுக்கு தவறான திசை காட்ட முயற்சிப்பதாகவும் கூறினார்.


எந்த ஒரு அரசியல் வரலாறு குறித்த அறிவும் இல்லாத இவர்கள் நெருப்புடன் விளையாட விரும்புகிறார்கள் என்றும் இது அவர்களுக்கான ஆபத்தில் முடியகூடும் என்றும் எச்சரித்தார். இந்த விழாவில் தற்போது அஸ்ஸாம் பாஜக அரசு அரசியலுக்கு அப்பாற்பட்டு முறையாக செயல்படுத்திவரும் என்.ஆர்.சி தேவை குறித்து சி.ஜே.ஐ கோகோய் விரிவாகப் பேசினார்.. தான் மாணவனாக இருந்த காலக் கட்டத்தில் என்.ஆர்.சி தேவை குறித்து உணர்ந்தவன் என்றார். அப்போதைய அஸ்ஸாம் மாணவர் இயக்கத்தில் இணைந்து இதற்காக போராடியதை நினைவு படுத்தி பேசினார். கோகோய் அஸ்ஸாம் மாநிலம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Translated Article From OP INDIA


Next Story
கதிர் தொகுப்பு
Trending News