நோய், மரணம் விஷயத்தில் மலிவான அரசியல் செய்ய வேண்டாம் ஸ்டாலினை விளாசிய அமைச்சர் விஜயபாஸ்கர்!
நோய், மரணம் விஷயத்தில் மலிவான அரசியல் செய்ய வேண்டாம் ஸ்டாலினை விளாசிய அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இறந்தவருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கவேண்டும் என்ற சொல்லக்கூடிய மு.க ஸ்டாலின் கருத்து சரியா? அல்லது ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்ற சொல்லக்கூடிய முதல் அமைச்சரின் கருத்து முக்கியமா என எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலினை விமர்சித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எவ்வளவாக இருந்தாலும் பரவாயில்லை என்ன விலையாக இருந்தாலும் பரவாயில்லை எது வந்தாலும் தமிழ்நாட்டுக்கு முதலில் வரவேண்டும், தமிழ்நாட்டுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும், நலன் முக்கியம், உயிர் முக்கியம் என்று நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிற முதல் அமைச்சரின் கருத்து! இதை நான் பொதுமக்கள் பார்வைக்கு விட்டு விடுகிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்க அதிபர் கேட்டபோது மனிதாபிமான அடிப்படையில் மத்திய அரசு அதை ஏற்றுமதி செய்தும் அப்பொழுது விலை பேசப்பட்டதா? பேரம் பேசப் பட்டதா? எனவே ரப்பிட் டெஸ்ட் கிட்டுகளை எள்ளளவு கூட அதிக விலைக்கு வாங்கவில்லை மத்திய அரசு எந்த நிறுவனத்தில் வாங்கியதோ அதே நிறுவனத்தில் அவர்களுக்கு என்ன விலைக்கு கொடுத்தார்களோ அதே விலைக்கு தான் நாமும் வாங்கி உள்ளோம் என குறிப்பிட்டார்.
ஆந்திர மாநிலத்தில் தமிழ்நாட்டை விட அதிக விலைக்கு வாங்கியுள்ளனர். ஆனால் அங்குள்ள எதிர்க்கட்சி ரப்பிட் டெஸ்ட் கருவிகள் வந்துவிட்டது என்பதற்காக பாராட்டி உள்ளனர். அனைத்து விஷயங்களிலும் சிறப்பாக செயல்படும் தமிழ்நாட்டை பாராட்டவில்லை என்றாலும் கூட நோய் விஷயத்தில், மரணம் விஷயத்தில், விலை விஷயத்தில் மலிவான அரசியல் செய்ய வேண்டாம்! இதை நான் வன்மையாக கண்டிப்பதாக ஸ்டாலினை விமர்சித்தார்.