Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு தமிழக மூத்த மருத்துவர் Dr.ஃபரூக் அப்துல்லா உருக்கமான வேண்டுகோள்!

டெல்லி இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு தமிழக மூத்த மருத்துவர் Dr.ஃபரூக் அப்துல்லா உருக்கமான வேண்டுகோள்!

டெல்லி இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு தமிழக மூத்த மருத்துவர் Dr.ஃபரூக் அப்துல்லா உருக்கமான வேண்டுகோள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 April 2020 3:06 AM GMT

டெல்லி இஸ்லாமிய தப்ளிகி ஜமாத் மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள் சிலர் கொரோனா சோதனைக்கு இன்னும் தங்களை உட்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள், அவர்கள் தங்கள் குடும்பத்தார் நலனுக்காகவும், அக்கம் பக்கத்தார் நலனுக்காகவும், எந்த சமய சாயங்களையும் பூசிக் கொள்ளாமல் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து சோதனைகள் செய்ய முன்வரவேண்டும் என சிவகங்கை மாவட்ட பொது நல மருத்துவ அதிகாரி Dr.ஃபரூக் அப்துல்லா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் சோதனைகளில் கடைபிடிக்கப்படும் மருத்துவ முறைகளையும் வெளிப்படையாக இந்த வேண்டுகோளில் தெரிவித்துள்ளார்.

பின்வருமாறு அவர் கூறியுள்ளார்:

புதுடில்லி நிஜாமுதீன் மர்கஸில் கடந்த மார்ச் 23 வரை பல மாநிலங்களில் இருந்தும் அந்த மார்க்க கூட்டத்தில் கலந்துக் கொண்டிருந்தனர். மேலும் அந்த கூட்டத்தில் வெளிநாடுகளில் இருந்தும் பலர் கலந்து கொண்டதை அறிவோம்.

இதனால் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவே அதே கூட்டத்தில் பங்கு பெற்ற பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மக்கள் குறித்த தகவல் பெறப்பட்டது. இதற்குப் பெயர் "CASE TRACING FROM A COMMON SOURCE" என்று பெயர்.

அதாவது ஒரு பொது இடத்தில் சில நாட்கள் குழுவாக தங்கியிருந்தவர்களுள் சிலருக்கு நோய் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டால், அதே இடத்தில் பங்கு பெற்ற மற்றவர்களையும் சோதிக்கும் முறை தான் CASE TRACING ஆகும்.

மேலும் அந்த கூட்டத்தில் பங்கு பெற்று திரும்பிய தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு நபர்கள் மரணமடைந்த செய்தி வந்தடைந்துள்ளது.

தமிழகத்தில் இருந்து சமய பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற மக்கள் குறித்து அறிந்து அவர்களது முகவரிகளை கண்டு அவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்று தனிமைப்படுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது

இதற்குப் பெயர் FACILITY QUARANTINE என்று அர்த்தம். இவ்வாறு செய்தவற்கு, ஒருவருக்கு நோயின் அறிகுறிகள் தோன்றியிருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

குவாரண்டைன் என்றால் நோயின் அறிகுறி தோன்றுவதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒருவரை தனிமைப்படுத்துவது ஆகும்.

எனவே புது டெல்லி மர்கஸில் கலந்து கொண்ட மக்களை மருத்துவமனையிலோ அல்லது அவர்களது வீட்டிலேயோ தனிமைப்படுத்துவது என்பது அறிகுறி இருந்தாலும் சரி. இல்லாவிடினும் சரி.

தனிமைப்படுத்துதல் என்பது முக்கியமானது.

அடுத்து தனிமைப்படுத்திய நபர்களுக்கு தொண்டைத் தடவல்/அன்னத்தடவல் பரிசோதனை செய்வது நடக்கும்.

கொரோனாவை ரத்த பரிசோதனை மூலம் இப்போதைக்கு கண்டறியும் பரிசோதனை இந்தியாவிற்கு வரவில்லை. எனவே தேவைப்படுபவர்களுக்கு மருத்துவர்கள் தொண்டைத்தடவல் பரிசோதனை செய்யப்படும். டெஸ்ட் பாசிடிவாகவும் வரலாம், நெகடிவாகவும் வரலாம்.

பாசிடிவ் என்றால் தாங்கள் 80% சாதாரண நோய் தொற்றுக்குள் வருகிறீர்களா? அல்லது சிகிச்சை தேவைப்படும் 20%-க்குள் வருகிறீர்களா? என்பதை நோய் குறிகள் தான் முடிவு செய்யும்.

அதுவரை நீங்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது சிறந்தது

சில இடங்களில் மருத்துவர்கள் நீங்கள் 80% சாதாரண நோய் தொற்றுடன் இருப்பதை அறிந்தால் உங்களை வீட்டுக்கே அனுப்பி HOME QUARANTINE இல் வைத்திருக்கவும் வாய்ப்பு உண்டு.

நாம் 80% சாதாரண நோய் தொற்றுக்கு கீழ் வருவோமாயின் நமக்கு சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு தேவையான சிகிச்சை போதுமானது.

எனவே அனைவருக்கும் க்ளூகோஸ் போடுவது, ஆக்சிஜன் வைப்பது போன்ற சிகிச்சைகள் தேவைப்படாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்

உங்களுக்கு தேவையான சிகிச்சையை மருத்துவக்குழு முடிவு செய்து சிறப்பாக செய்யும். எனவே வீணான பயம் அச்சம் தேவையற்றது. கவலைப்படாதீர்கள்.. மேலும் இது குறித்து மதச்சாயம் பூசப்பட்டு வரும் செய்திகளை கடந்து விடுங்கள். இன்று உங்களது கண்ணும் கருத்தும் நோய் பிறருக்கு பரவாமல் தடுக்க இருப்பதாய் அமைய வேண்டும்.

தாங்கள் புது டெல்லிக்கு சென்று சமய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நோய் தொற்று பெற்றதற்கோ அல்லது அங்கு சென்றதற்கோ நீங்கள் பொறுப்பாக முடியாது. ஆனால், உங்களால் உங்கள் குடும்பத்தினருக்கோ அக்கம் பக்கதினருக்கோ சமூகத்தினருக்கோ நோய் தொற்று பரவினால் அதற்கான முழு பொறுப்பு உங்களுடையது. எனவே தயவு கூர்ந்து உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அசாதாரண சூழ்நிலையை பொறுத்துக்கொண்டு தனிமையில் இருங்கள், அரசுடன் ஒத்துழையுங்கள் இந்த கொள்ளை நோயை கட்டுப்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் உடலாலும் உணர்வாலும் செய்யுங்கள்.

இன்னும் யாரெல்லாம் இந்த செய்தியை படிக்கிறீர்களோ உங்களது உறவினர்/ நண்பர் / அக்கம்பக்கத்து வீட்டார் யாரேனும் புதுடில்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியிருந்தால் அவர்களைப் பற்றிய செய்திகளை உங்களது மாவட்ட சுகாதாரத்துறைக்கு தெரிவியுங்கள்.

இது உங்களை கடமை . இது மத துவேசத்தை பரப்பும் நேரமன்று மாறி மாறி குற்றம் கண்டறியும் நேரமுமன்று நிச்சயம் நம்மை விட மிக வேகமாக மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது.

தயவு செய்து நமது ஒற்றுமை எனும் கயிற்றை இறுகப் பற்றி கொரோனா பரவும் சங்கிலியை அறுத்தெறிவோம்.

இறைவன் நாடினால் நாமே வெற்றியாளர்கள்

இவ்வாறு மூத்த மருத்துவர் ஐயா Dr.ஃபரூக் அப்துல்லா அரசுடன் ஒத்துழைக்க வேண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News