Kathir News
Begin typing your search above and press return to search.

ட்ரோன் விமானங்களை வைத்து இனி ஆறுகளில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும் - அரசுக்கு பொது ஆர்வலர்கள் கோரிக்கை.!

ட்ரோன் விமானங்களை வைத்து இனி ஆறுகளில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும் - அரசுக்கு பொது ஆர்வலர்கள் கோரிக்கை.!

ட்ரோன் விமானங்களை வைத்து இனி ஆறுகளில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும் - அரசுக்கு பொது  ஆர்வலர்கள் கோரிக்கை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 April 2020 4:55 AM GMT

கொரோனா கிருமிகள் பரவுவதை தடுத்து நிறுத்த ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் அனைவரும் தேவை இல்லாமல் வெளியே வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இவற்றை எல்லாம் மீறி பலர் வாகனங்களில் கண்ட இடங்களில் சுற்றித் திரிகின்றனர்.

போலீசார் முடிந்த வரை முடிந்த இடங்களில் இவற்றைக் கட்டுப் படுத்துகின்றனர். ஆனால் எல்லா இடங்களிலும் சென்று ஒரே சமயத்தில் கட்டுப்படுத்துவது வாய்ப்பில்லாததால் இப்போது ஆளில்லா சிறிய ரக ட்ரோன் விமானங்களில் அதி நவீன மென் பொருளை பொருத்தி அதன் மூலம் ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டத்தை சுலபமாக கண்காணித்து வருகின்றனர்.

குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீல் வைக்கின்றனர். இந்த பகுதிகளில் ஆள் நடமாட்டத்தை கண்காணிக்க போலீசாருக்கு மிகவும் உதவியாக இந்த சிறிய வகை விமானங்கள் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

இந்த விமானத்தில் சமீபத்தில் பொருத்தப்பட்டுள் தொழில் நுட்ப மென்பொருள் சென்னை ஐ ஐ டி யால் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதன் பெயர் 'DATA FROM SKY' ஆகும்.

இந்த வசதியை கொண்ட சின்னஞ்சிறிய இந்த விமானங்கள் 20 அடி உயரத்தில் ஒரு இடத்தில் பறக்கும் போது அங்கு எத்தனை வாகனங்கள் செல்கின்றன, எத்தனை மக்கள் செல்கிறார்கள் என்கிற கணக்கை துல்லியமாக எடுக்கும் என கூறுகிறார்கள், மேலும் சாலையில் செல்லும் அனைவருடைய முகத்தையும் மிகவும் துல்லியமாக படம் எடுக்கும். இதனால் தனிமை படுத்தப்பட்டவர்கள் யாரேனும் சாலைகளில் நடமாடினால் அவர்களை இந்த கருவி கண்டு பிடிப்பதுடன், அவர்கள் செல்லும் வாகன எண்ணையும் இது போலீசாருக்கு சரியாக தெரிவித்துவிடுமாம்.

இந்த நிலையில் இத்தகைய அபூர்வ தொழில் நுட்பம் கொண்ட இந்த சிறிய ரக விமானங்களை கொரோனா தடுப்பு பணிகள் முடிந்ததும், மணல் கடத்தப்படும் ஆறுகளை கண்காணிக்க பயன்படுத்த வேண்டும் என்றும் இதன் மூலம் மணல் கடத்தல் தடுக்கப்படுவதுடன், இயற்கை வளங்களை சுரண்டுபவர்களையும் கண்காணிக்கலாம் என்று அரசையும், போலீசாரையும், அதிகாரிகளையும் பொது நலன் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News