Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு பக்கம் கொரோனாவுக்கு எதிரான போர், இன்னொரு பக்கம் இழந்த வாழ்வாதாரங்களை துணிச்சலுடன் மீட்கும் மோடி அரசு. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு.!

ஒரு பக்கம் கொரோனாவுக்கு எதிரான போர், இன்னொரு பக்கம் இழந்த வாழ்வாதாரங்களை துணிச்சலுடன் மீட்கும் மோடி அரசு. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு.!

ஒரு பக்கம் கொரோனாவுக்கு எதிரான போர், இன்னொரு பக்கம் இழந்த வாழ்வாதாரங்களை துணிச்சலுடன் மீட்கும் மோடி அரசு. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 April 2020 2:35 AM GMT

கொரோனா தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு குடிமக்களை என்ன விலை கொடுத்தாகிலும் காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காக, ஊரடங்கு உத்தரவை இரண்டாம் கட்டமாக மேலும் 19 நாட்களுக்கு தள்ளிவைத்த பிரதமர் மோடியின் முடிவு மிகவும் துணிச்சலான முடிவு. இதனால் நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்படும் நஷ்டங்கள் குறித்து அவருக்கு நன்றாக தெரியும், நாட்டின் பொருளாதாரம், வேலை வாய்ப்பு, மற்றும் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும் என்றாலும் கடினமான, இந்த பூட்டப்பட்ட ஊரடங்கு நிலையிலும் மிகவும் தைரியமாக மீண்டும் பொருளாதார இயல்பு நிலையை மீட்க மோடி அரசு சிறந்த திட்டங்களை வரும் 20 ந்தேதியில் இருந்து படிப்படியாக அமல்படுத்துவதை நிபுணர்கள் பாராட்டியுள்ளனர்.

ஒரு பக்கம் ஊரடங்கால் மக்கள் தங்கள் தினசரி வாழ்வாதாரத்தை இழந்து வரும் நிலையில் அதையும் சரி செய்ய வேண்டும், அதே சமயம் தினமும் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகையில் பொருளாதரத்தை மீண்டும் உயிர்த்தெழ நேற்று பிரதமர் மோடி அறிவித்த தளர்வு திட்டங்கள் பிரமாதமானவை என்று கூறுகின்றனர்.

►பிரதமர் மோடி அரசின் திட்டப்படி ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சு வேலை, மெக்கானிக் தொழில் செய்வோர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

► சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் தங்களது பணிகளைத் தொடரலாம். ஆனால், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.

► ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்குச் செல்லலாம். ஆனால் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.

► விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி

► அதேசமயம் மே 3 ஆம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத் தலங்கள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை தொடரும்.

► மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க மத்திய அரசு தொடர்ந்து அனுமதி.

► சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் ஏப்ரல் 20 முதல் இயங்கலாம். அதே நேரத்தில் சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளை கண்டிப்பாக தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டும்.

► ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் கட்டுமானப் பணிகள் நடைபெற அனுமதி. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததாக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த தளர்வு பொருந்தாது.

► மக்கள் நெருக்கம் குறைவான பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி.

► நெடுஞ்சாலையோரம் உள்ள ஹோட்டல்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

► மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்துக்கு தடை தொடரும்.

► கனரக வாகன பழுதுபார்ப்பு கடைகளை திறக்க அனுமதி.

► அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்கள் திறக்கலாம்.

► மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் தொடர்ந்து செயல்படலாம்.

► ரயில் மற்றும் விமான சேவைகளுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மருந்துப் பொருட்கள், மருந்து உபகரணங்கள் கொண்டு செல்ல மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

► அதேபோன்று ராணுவ வீரர்கள் பயணிக்க மற்றும் முக்கியப் பணிகளுக்காக மட்டும் ரயில்கள் இயக்கப்படும்.

► மக்கள் வெளியே செல்லும்போது, முகக்கவசம் அணிவது கட்டாயம். வேலை செய்யும் இடங்களிலும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

► தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

► பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது. இறுதிச் சடங்குகளில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

► ஊரகப் பகுதிகளில் தொழில் நிறுவனங்கள், உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்க அனுமதி.

► இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி. நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் தவிர பின் இருக்கையில் ஒருவர் மட்டும் அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மோசமான கால கட்டத்திலும் மக்களுக்கு நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிப்பதுடன், பொருளாதாரத்தை மீண்டும் படிப்படியாக எழுச்சியுற வைக்க மோடி அரசு நம்பிக்கையுடன் கொண்டு வந்த திட்டங்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் சாதுர்யம் என பொருளாதார நிபுணர்கள் வெகுவாக பாராட்டியுள்ளதாக MY NATION ஆங்கில பத்திரிகை கூறியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News