கொள்ளையர்களை கொலைநடுங்க வைத்த வயதான தம்பதி! அமிதாப் முதல் ஹர்பஜன் வரை பாராட்டு !!
கொள்ளையர்களை கொலைநடுங்க வைத்த வயதான தம்பதி! அமிதாப் முதல் ஹர்பஜன் வரை பாராட்டு !!
By : Kathir Webdesk
கொள்ளையர்களை அடித்து விரட்டிய வயதான நெல்லை தம்பதிக்கு, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், முதல் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் கடையம், கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல்(78). இவர் 4 ஏக்கரில் எலுமிச்சை தோட்டம் அமைத்து, அதனுடன் வீடு கட்டி வசித்து வருகிறார். இவரது மனைவி செந்தாமரையுடன் (70).
நேற்று முன்தினம் (11-ஆம் தேதி) இரவு 9 மணிக்கு வீட்டு முற்றத்தில், சண்முகவேல் அமர்ந்திருந்தபோது 2 கொள்ளையர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் இருவரும் முகமூடி அணிந்து இருந்தனர்.
அவர்களில் ஒருவன், சண்முகவேல் பின்புறமாக நைசாக வந்து அவரின் கழுத்தில் துண்டால் சுற்றி இறுக்கினான். மற்றொருவன் உள்ளே வந்தான். அப்போது வீட்டினுள் இருந்து வந்த செந்தாமரை, வீரத்துடன் செருப்புகளை முதலில் தூக்கி கொள்ளையர்கள் மீது வீசினார். இதனால் நிலை கொள்ளையன் நிலை தடுமாறினான். சண்முகவேலை தன்னை பிடித்திருந்தவனை தள்ளிவிட்டு அவனை சேர்களால் தாக்கினார்.
வயதான தம்பதிகள் இருவரும் எந்தவித பதட்டமும் இல்லாமல், கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து கொள்ளையர்கள் இருவரையும் அடித்து துவசம் செய்தனர்.
வேறு வழியில்லாமல் கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்தனர். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் கொள்ளையர்கள் இருவரும் கையில் அரிவாள் வைத்து இருந்தனர். அதனைக் கொண்டு முதியவர்களை வெட்ட முயன்றனர். முதயவர்களின் ஆக்ரோசத்தின் முன்னால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
இந்த காட்சிகள் அங்கு மாட்டப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இன்னமும் அது பரவி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் முதல் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வரை அந்த வயதான தம்பதிகளை பாராட்டி வருகின்றனர். பலதரப்பினரின் பாராட்டு மழையில் முதிய வீர தம்பதி நனைந்து வருகிறது.
அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த வீடியோ காட்சிகளை மேற்கோள் காட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில், “திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோவை பாத்தா அல்லு விடும். என்ன வீரம். பாசத்துக்கு முன்னாடி நான் பனி. பகைக்கு முன்னாடி புலி என்று சொல்ர மாதிரி மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் நேர்கொண்டபார்வை. இந்த வயதான நெல்லை தம்பதிக்கு தலை வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.