Kathir News
Begin typing your search above and press return to search.

வீரர்களின் குடும்பத்துக்கு தலா ₹20 லட்சம் நிவாரணம் - முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு! #PulwamaAttack

வீரர்களின் குடும்பத்துக்கு தலா ₹20 லட்சம் நிவாரணம் - முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு! #PulwamaAttack

வீரர்களின் குடும்பத்துக்கு தலா ₹20 லட்சம் நிவாரணம் - முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு! #PulwamaAttack

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Feb 2019 1:25 PM GMT


காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்களின் குடும்பத்துக்கு தலா ₹20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல் படையினர் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இச்சம்பவத்திற்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த பாதுகாப்புப் படைவீரர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இத்தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஜி.சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சி.சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது. இந்த தாக்குதலில் உயிரிழந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.




https://twitter.com/SreshthaTiwari/status/1096328721823199232


இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News