Begin typing your search above and press return to search.
எல்லாமே போலி - லோகேஷ் கனகராஜ்..
எல்லாமே போலி - லோகேஷ் கனகராஜ்..

By :
முன்பெல்லாம் ஒரு பிரபலத்தினை பற்றிய தகவல்களை பெறுவது அவ்வளவு கடினம். ஆனால் இன்றோ சமூக வலைதளங்கள் வந்த பின்னர் பெரும்பாலான பிரபலங்கள் தங்கள் கணக்கை துவங்கி ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். அதே வேளையில் சில விஷமிகள் பிரபலங்கள் பெயரில் போலி கணக்கை துவங்கி அவர்களை போலவே சில பதிவுகளை பகிர்ந்து பின்னர் சர்ச்சைகுறிய பதிவுகளை பகிர்ந்து அதனை பார்த்து பதறி போனவர்ள் அது போலி கணக்கு என்ற விளக்கம் கொடுத்ததெல்லாம் கூட நாம் பார்த்திருக்கிறோம்.
அந்த வரிசையில் தற்போது இனைந்துள்ளார் 'மாஸ்டர்' படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ். தான் டிவிட்டரில் மட்டுமே இருப்பதாகவும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய வலைதளங்களில் தனக்கு கணக்கு இல்லை என தெரிவித்துள்ளார். இவரின் பெயரில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவுகள் வெளியாவைதையொட்டி இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
Next Story