Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்புக் கட்டுரை: 1968ல் உருவாக்கப்பட்ட மும்மொழிக் கொள்கையின் வரலாறு.!

சிறப்புக் கட்டுரை: 1968ல் உருவாக்கப்பட்ட மும்மொழிக் கொள்கையின் வரலாறு.!

சிறப்புக் கட்டுரை: 1968ல் உருவாக்கப்பட்ட மும்மொழிக் கொள்கையின் வரலாறு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 11:43 AM GMT

புதிய கல்விக்கொள்கை 2020 (NEP) வெளியானதற்கு பிறகு, தமிழ்நாட்டில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பதாக கூறி திராவிட கட்சிகள் எதிர்த்து வருகின்றன.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சனிக்கிழமை அன்று தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், இந்த இந்த புதிய கல்விக் கொள்கை இந்தியையும் சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டில் திணிப்பதற்கான ஒரு முயற்சி என்றும், இதை எதிர்க்க இதே போன்ற எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் பிற மாநிலங்களின் முதல்வர்களுடன் கைகோர்த்து அதற்கு எதிராக போராடப் போவதாக உறுதியளித்தார்.

தகவல்களின் படி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வடமாநிலங்களுக்கு தகுந்த கொள்கைகள் தென் மாநிலங்களுக்கும் உகந்ததாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், புதிய கல்விக் கொள்கை மூலமாக சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிப்பதாகவும் இது குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தினார்.

திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, புதிய கல்விக்கொள்கையில் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை புகுத்தியுள்ளது குறித்து தாங்கள் வருத்தம் அடைந்து இருப்பதாகவும் தமிழ்நாடு ஏற்கனவே இரு மொழிக் கொள்கைகள் அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல்லாண்டுகளாக பின்பற்றி வருவதாகவும் அதில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, மாநில அரசுகளின் விருப்பத்திற்கு எதிராக எந்த மொழியையும் திணிப்பது மத்திய அரசின் நோக்கமல்ல என்று கூறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷான்க் ட்விட்டரில் தமிழில், தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு பதிலளிக்கும் விதமாக, மத்திய அரசு புதிய புதிய கல்விக் கொள்கையின் வழியாக எந்த மொழியையும் திணிக்காது என்று உறுதி அளித்தார்

"மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்காது" என்று நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

கடந்த வருடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா பிராந்திய மொழிகளுக்கு பதிலாக ஹிந்தியைத் தான் கேட்கவில்லை என்று தெளிவு படுத்த வேண்டி இருந்தது. ஹிந்தி ஒரு ஒருங்கிணைப்பு மொழி என்று அவர் கூறியதற்கு பிறகு பெரும் சர்ச்சை ஏற்பட்டதால் இவ்வாறு விளக்க வேண்டியிருந்தது.

சுதந்திர இந்தியா உருவான காலகட்டத்தில் இருந்தே மொழி ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சனையாகவே இருக்கிறது. மக்களின் கலாச்சார இதயத்திலும், உணர்ச்சிப்பூர்வமான விஷயமாகவும் மொழி இருப்பதால் இது ஆச்சரியப்படும் விஷயம் அல்ல.

1949 இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஹிந்தி மொழி தேவநாகிரி வடிவத்தில் மத்திய அரசின் அலுவல் மொழியாக கொடுத்தது. ஆனால் ஆங்கில மொழியை இன்னும் பதினைந்து வருடங்களுக்கு தொடர்ந்து உபயோகிக்கலாம் என்றும் 15 வருடங்களுக்குப் பிறகு ஆங்கில மொழியை எந்தெந்த இடங்களில் உபயோகிக்கலாம் என்பது குறித்து தனியாக சட்டங்கள் இயற்றிக் கொள்ளலாம் என்றும் வழிவகுத்தது.

மேலும் அரசியல் அமைப்புச் சட்டம் அரசாங்கத்தை, 5 வருடம் மற்றும் 10 வருடங்களுக்கு ஒருமுறை ஹிந்தி மொழியை அடுத்து எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்ய ஒரு கமிஷனை நியமித்து அதை ஆய்வு செய்ய ஒரு பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

15 வருடங்கள் முடிவடையும் தருணம் நெருங்கிக் கொண்டிருந்தபோது, தென் மாநிலங்களில் பல இடங்களில் போராட்டம் வெடித்தது. அதேநேரத்தில் தென்மாநில மக்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்களை உருவாக்க போராடி வந்தனர்.

இந்த போராட்டங்களை மனதில் கொண்ட மத்திய அரசு அலுவல் மொழி சட்டம் 1963 கொண்டுவந்து ஹிந்தி உடன் சேர்த்து ஆங்கில மொழியும் உபயோகப்படுத்தப்படும் என்ற விதிமுறையை கொண்டுவந்தது. 1967ல் ஆங்கிலத்தை, ஹிந்தி உடன் சில இடங்களில் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையையும் கொண்டு வந்தது.

இதே சமயத்தில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அரசியலமைப்புச் சட்டம், எந்த மொழியை அதிகாரபூர்வமாக ஒரு மாநிலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அந்த மாநில அரசுகளின் சட்டசபைக்கு விட்டுவிட்டது.

மும்மொழி கொள்கை முதன்முதலாக 1968இல் இந்திரா காந்தியால் உருவாக்கப்பட்ட புதிய மொழி புதிய கல்விக்கொள்கையுடன், மாநிலங்களை கலந்து ஆலோசித்த பிறகு சேர்க்கப்பட்டது.

இதற்கான நோக்கம் என்னவென்றால் மாணவர்களை, தங்கள் தாய்மொழியை தவிர்த்து இந்திய மற்றொரு இந்திய மொழியை கற்க வைக்க வேண்டும் என்பதே.

ஹிந்தி பேசும் மாநிலங்களில் இந்த கொள்கை ஹிந்தி, இங்கிலீஷ் மற்றும் மற்றொரு நவீன இந்திய மொழி (தென்னிந்திய மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது) ஹிந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஹிந்தி இங்கிலீஷ் மற்றும் அவரவர்களின் பிராந்திய மொழிகளை கற்க வேண்டும் என்று இருந்தது. மற்ற எந்த மொழி பிரிவினர் மீதும் எந்த கூடுதல் சுமையும் இல்லை.

ஆனால் கல்வித் துறை என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவது. அதை நடைமுறைப் படுத்துவதும் மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்தது. இங்கேதான் மும்மொழிக் கொள்கை செயல்பட தவறியது.

2015ல் வெளிவந்த "மும்மொழிக் கொள்கை- பல மொழிகளைக் கொண்ட இந்தியாவில் அதை நடைமுறைப் படுத்துவதற்கான சவால்கள்" என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் டெல்லி பல்கலைக் கழகத்தை சேர்ந்த லீனா ராட்டி, ஒரு சில மாநிலங்கள் மட்டுமே, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாக குறிப்பிடுகிறார் அந்த கட்டுரையில்,

"பல ஹிந்தி பேசும் மாநிலங்களில் சமஸ்கிருதம் மூன்றாவது மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. (நவீன இந்திய மொழி அதாவது தென்னிந்திய மொழிக்கு முக்கியத்துவம் தராமல் சமஸ்கிருதம் மூன்றாவது மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது) இந்தி பேசாத மாநிலங்களில் (தமிழ்நாடு போன்ற மாநிலங்களில்) இருமொழிக் கொள்கை தொடர்ந்தது.

சில வாரியங்கள் அல்லது நிறுவனங்கள் ஐரோப்பா மற்றும் அந்நிய மொழிகளான ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகியவற்றை ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்திற்கு பதிலாக அனுமதித்தன. ஒரு சில மாநிலங்கள் மட்டுமே மும்மொழிக் கொள்கையை அப்படியே பின்பற்றுவதாகவும், பலர் அதில் பல மாற்றங்களை செய்ததாகவும், பலர் அதில் மிகவும் மாற்றங்களை ஏற்படுத்தி அதை நடைமுறைப்படுத்துவதற்கு இயலாத ஒரு விஷயமாக மாற்றி விட்டதாகவும் குறிப்பிடுகிறது.

தற்போது மொழி பிரச்சனை மிகவும் அரசியல் மயமாக்கப்பட்டு உள்ளதால் எந்த ஒரு தீர்வும் பயனுள்ளதாக மட்டுமின்றி எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் இருப்பது சாத்தியமில்லை. மொழி அடையாள அரசியல் உடன் பின்னிப் பிணைந்து விட்டதே இதற்கு காரணம்.

நீலாஞ்சன் சிர்கார் குறிப்பிடுகையில்,

" தேசிய மொழி என்பதற்கான கோரிக்கை ஒரு நவீன மயமான கருத்தாக்கத்தில் இருந்து உருவாகிறது. இந்த கருத்தாக்கத்தில் ஒரு பொது மொழி என்பது கல்வியை நிலைப்படுத்தி, தகவல்தொடர்பை வலிமையாக்கி, அரசியல்ரீதியாக நாட்டை ஒன்றிணைக்கிறது. (அதாவது ஐரோப்பா நாடுகளில் இருப்பது போல) சொல்லப்போனால் இந்தோனேஷியா, தன் சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு புதிய மொழியை கண்டுபிடிக்கும் அளவிற்கு சென்றது. இந்தியாவிற்கு தேசிய மொழி இல்லாமல் இருந்தது தேசத்தை உருவாக்குவதில் உள்ள கொள்கையை விட நமக்கு அதிக தேவை இருந்ததால் ஏற்பட்டது."

அவர் விவாதத்தின் படி ஒரு குறிப்பிட்ட குழுவை சக்தி வாய்ந்த இடத்தில் இருந்து இறக்கி அதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை நாம் அடைய முயற்சித்தால் (உதாரணமாக ஸ்ரீலங்காவில் தமிழர்கள்) அது உள்நாட்டு குழப்பத்தை உருவாக்கும்.

ஒரு நவீனத்துவ வாதியின் முயற்சியான 'ஒரு மொழி' என்பது ஒரு தேசிய மொழியை கற்பதன் மூலம் மற்றவர்களை விட தங்களுக்கு அதிக ஆதாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையினால் தான். எனவே தான் தாங்கள் எந்த மொழியில் சேர்ந்தவராக இருந்தாலும் ஆங்கில மீடிய தனியார் பள்ளிகளுக்கு மக்கள் செல்கிறார்கள்.

மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக ஒரு தேசிய மொழி உருவாக வேண்டும் என்றால் அதற்கு பல காரணிகள் இது போல தேவைப்படுகின்றன.

https://swarajyamag.com/news-brief/explained-everything-you-need-to-know-about-neps-three-language-formula-that-has-sparked-a-row

Next Story
கதிர் தொகுப்பு
Trending News