Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்லைனிலேயே நோட்டீஸுக்கு பதிலளிக்கலாம் - அறிவுறுத்தும் வருமான வரித்துறை.! #FacelessAssessment

ஆன்லைனிலேயே நோட்டீஸுக்கு பதிலளிக்கலாம் - அறிவுறுத்தும் வருமான வரித்துறை.! #FacelessAssessment

ஆன்லைனிலேயே நோட்டீஸுக்கு பதிலளிக்கலாம் - அறிவுறுத்தும் வருமான வரித்துறை.! #FacelessAssessment

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 July 2020 10:03 AM GMT

2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரிகா கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் தாக்கல் செய்த கணக்குகளில் குளறுபடிகள் உள்ளவர்களுக்கு உதவும் விதமாக வருமான வரித்துறை #FacelessAssessment எனப்படும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு உதவும் விதமாக இந்த நிதியாண்டுக்கான பணப்பரிமாற்றம் குறித்த வருமான வரித்துறையிடம் இருக்கும் தகவல்களை சரிபார்த்து ஒப்புதல் அளிக்கச் செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசு கேட்டுக்‌ கொண்டுள்ள நிலையில் வருமான வரி பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு மக்கள் வருவதைக் குறைக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முறையில் தாங்களாகவே முன்வந்து பதிவு செய்து கொண்டு தங்களது பணப் பரிமாற்ற மற்றும் வரித் தாக்கல் விவரங்களை வருமான வரித்துறை இணையதள பக்கத்தில் சரிபார்த்து ஒப்புதல் அளிக்க மக்களை ஊக்குவிக்குமாறு துறை சார்பில் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இதன் மூலம் கடைசி தேதி முடிந்த பின்னரும் வரித் தாக்கல் செய்யாமல் இருந்து நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியத்தை குறைக்கலாம் என்பதால் இந்த e-campaign முயற்சியில் வருமான வரித்துறை இறங்கியுள்ளது.

அப்படியே ஒருவருக்கு நோட்டீஸ் வந்தாலும் வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு செல்லவோ, நேரடியாக அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம்‌ அளிக்கவோ அவசியம் இல்லை என்றும் Faceless Assessment முறையில் ஆன்லைனிலேயே பதிலளிக்கலாம் என்றும் வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Next Story