Kathir News
Begin typing your search above and press return to search.

உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என கருதப்படும் ஆச்சர்ய கோவில்.!

உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என கருதப்படும் ஆச்சர்ய கோவில்.!

உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என கருதப்படும் ஆச்சர்ய கோவில்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 July 2020 2:10 AM GMT

மதுரையில் இருந்து 80 கி.மி. தூரத்தில் உள்ள உத்தரகோசமங்கையில் உள்ளது மங்களநாதர் மங்களாம்பிகை கோயில் . இங்கு உலகில் எங்குமே இல்லாத மரகத்தினாலான நாடராஜர் சிலை உள்ளது . இந்த கோயில் உலகத்திலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோயில் என்று நம்பப்படுறது. ஆதிகாலத்தில், நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் சூரியன் செவ்வாய் சந்திரன் மட்டுமே இங்கு நவகிரஹங்களாக அறியப்பட்டு வந்துள்ளனர் . உத்திரம் என்பது உபதேசம் கோசம் என்பது ரகசியம் பிரணவ மந்திரத்தின் ரகசியத்தை இங்கு தேவிக்கு உபதேசித்ததால் இத்தளத்திற்கு இப்பெயர் ஏற்பட்டது .

இத்தலத்திலேயே ஈசன் இறைவிக்கு ஆனந்த தாண்டவத்தை ஆடி அருளினார் . மரகத நடராஜர் சிலையின் உயரம் 51 |2 அடி உள்ளது . மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று மட்டுமே நடராஜர் சிலைக்கு பூஜைகள் செய்யபடுகின்றன .மற்ற நாட்களில் சந்தன காப்பு மட்டுமே சாற்றப் படுகிறது. ஆருத்ரா தரிசனத்தின் போது சந்தன காப்பு நீங்கி மற்ற அபிஷேகங்கள் நடக்கின்ற்ன.

இந்த கோயில் சிற்பங்கள் மிக ஆச்சர்யமான முறையில் செதுக்கபட்டிருக்கிறது . இங்கு பிராகாரத்தின் இரு புறங்களிலும் இரண்டு யாளிகளும் அதன் வாய்களுக்குள் கல்பந்துகளும் உள்ளன . இவை எந்த வித பிடிமானமும் இல்லாமல் கைகளால் உருட்டும் அளவிற்கு அமைக்க பட்டிருக்கிறது . இங்கு திருவாதிரை விரதம் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது . சிவனின் நட்சத்திரம் திருவாதிரை என்பதால் இங்கு அந்த விழா சிறப்பாக கொண்டாட படுகிறது. திருவாதிரையோடு சேர்த்து வரும் பெளர்ணமி அன்று முழுவதும் உபவாசம் இருந்து ஈசனை வழிபடுவது திருவாதிரை நோன்பாகும் . அன்று தான் நடராஜர் உலா வரும் ஆருத்ரா தரிசனம் நடைபெருகிறது .

இந்த கோயிலில் உள்ள சிவ பெருமான் சுயம்புவாக உருவானவர் .

உலகத்திலேயே பெரிய பச்சை மரகத கல் இது . விழா காலங்களில் ஏற்படும் சப்தம் மற்றும் ஒளியால் பாதிக்கப் படாமல் இருக்க சந்தன காப்பு அணிவிக்க படுகிறது . ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்த சிலை எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது . இந்த உத்திரகோசமங்கை மதுரையில் இருந்து 80 கி.மி தூரத்தில் ராமநாதபுரம் சாலையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது .

Next Story
கதிர் தொகுப்பு
Trending News