Kathir News
Begin typing your search above and press return to search.

விசா வழங்கும் அதிசய விநாயகர்.!

விசா வழங்கும் அதிசய விநாயகர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Jun 2020 1:35 AM GMT

இந்துக்களின் முழு முதற் கடவுள் விநாயகர் . விநாயகரின் உடலில் நவகிரஹங்களும் அடங்கியிருக்கின்றன . இவரை வழிபட்டால் நவகிரஹங்களை வழிபட்ட பலன் கிடைக்கும். பொதுவாக இவர் காரிய வெற்றிக்கு வழி படபடுவார்.

பிரத்யேகமாக வெளிநாட்டு விசா கிடைப்பதற்காகவே வழிபடப்படும் பிள்ளையார் தமிழகத்தில் பிள்ளையார் பட்டியில் உள்ளார் . இந்த பிள்ளையார் பட்டி தமிழகத்தில் அமைந்த முதல் குடவரை கோவிலாகும் . பல்லவர் காலத்திற்கு முன்பே ஈக்காட்டூர் கூன் பெரும்பாரணன் என்பவர் இந்த கோயிலை உருவாக்கினார். இந்த ஊருக்கு ஈக்காட்டூர் ராஜ நாராயணபுரம் மருதன்குடி போன்ற பெயர்கள் இருந்தன . சில நூறு ஆண்டுகளுக்கு முன் கோயில் வளாகம் விரிவுபடுத்தப்பட்டு பிள்ளையார்பட்டி என்ற பெயர் உருவானது . இங்குள்ள விநாயகர் வடக்கு நோக்கியிருக்கியிருக்கும் வலம்புரி விநாயகர் . விநாயகரை இது போன்று குடவரை கோயில் சிற்பமாக தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாது .

இந்த கோயிலில் செய்யும் பூஜை அதீத சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இந்த கோயில் பூஜை செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் தங்கு தடையுன்றி நடக்கும் என்பது பலரின் அனுபவ பூர்வமான உண்மை. அதனாலேயே இந்தியா முழுவதும் இருந்து வந்த மக்கள் இங்கே பூஜை செய்கிறார்கள். மிகவும் குறிப்பாக வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் இங்கு வந்து வழிபட்டால் உடனே பலன் கிடைப்பதாக சொல்கிறார்கள். தமிழகத்தில் வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் தவறாமல் இங்கு வந்து வேண்டுதல் வைத்து விட்டு செல்கிறார்கள். பிள்ளையார் பட்டி விநாயகர் என்று வெளியே தெரிந்த அளவிற்கு இவர் விசா விநாயகர் என்றும் அழைக்கபடுகிறார்.

இக் கோயிலின் தல விருட்சம் மருத மரமாகும் இந்த கோயில் வளாகத்தில் செப்பு சிலைால் ஆன நடராஜர் சிலையை தட்டினால் டமார வாத்யத்தியத்தின் இசையை கேட்க முடிகிறது .

கணபதி ஹோமமும் பாலாபிஷேகமும் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை இங்கு செய்தால் நாம் செய்கிற தொழிலில் வளர்ச்சி அடைவது நிச்சயம் என்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இந்த விநாயகர் படத்தை பாக்கெட்டில் வைத்திருப்பதை காண முடியும் . கற்பக விருட்சம் போல் கேட்டதை அருளும் இந்த விநாயகர் படத்தை தமிழகத்தின் பெரும்பாலான வியாபார ஸ்தலத்தில் பார்க்க முடியும் .

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து இன்றக்குடி செல்லும் சாலையில் 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது பிள்ளையார்பட்டி

Next Story
கதிர் தொகுப்பு
Trending News