Kathir News
Begin typing your search above and press return to search.

காற்றடிக்கும் திசைக்கு எதிர்திசையில் கொடி பறக்கும் அதிசயம் - இன்னும் பல அதிசயங்கள் நிறைந்த ஆலயம்.!

காற்றடிக்கும் திசைக்கு எதிர்திசையில் கொடி பறக்கும் அதிசயம் - இன்னும் பல அதிசயங்கள் நிறைந்த ஆலயம்.!

காற்றடிக்கும் திசைக்கு எதிர்திசையில் கொடி பறக்கும் அதிசயம் - இன்னும் பல அதிசயங்கள் நிறைந்த ஆலயம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 2:05 AM GMT

இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டில் அனந்த வராமல் என்கிற கங்கை பேரரசின் மன்னன்னால் கட்டப்பட்டது. ஒடிசா மாநிலத்தின் பூரியில் அமைந்துள்ள ஜெகநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம். இந்த கோவிலில் உள்ள ஜெகநாதர் மஹாவிஷ்ணு ஆவார். இந்த கோவிலில் இயற்கைக்கு அப்பாற்பட்ட பல அதிசயங்கள் இருக்கின்றன.

இந்த கோவிலின் உச்சியில் இருக்கும் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர்திசை பறக்கும் ஆச்சர்யத்தை தினந்தோறும் காணலாம் இந்த கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன் சக்ரம் பூரி நகரத்தில் எந்த திசையில் இருந்து பார்த்தாலும் தெரியும். புவியியல் அறிவியலின் அடிப்படியில் காற்றானது பகல் நேரத்தில் கடலில் இருந்து பூமிக்கும் இரவில் பூமியில் இருந்து கடலுக்கும் செல்லும். அனால் பூரியில் இது அப்படியே தலைகீழாக நடக்கும் அதிசயத்தை பார்க்கலாம் இந்த கோவிலுக்கு மேல் எந்த பறவையோ விமானமோ பறந்ததில்லை.

இந்த கோவிலின் பிரதான கோபுரத்தின் நிழல் பூமியில் விழுவதில்லை . இந்த கோவிலுக்கு நிழலே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு இங்கு எந்த இடத்தில் சூரியன் இருந்தாலும் இந்த கோவிலின் நிழல் விழுவதில்லை. இந்த கோவிலில் தயார் செய்யப்படும் பிரசாதம் எப்போதும் வீணாவதில்லை, பத்து பேர் வந்தாலும் பத்தாயிரம் பேர் வந்தாலும் பிரசாத்தின் அளவு மிக சரியாக அமைகிறது

இந்த கோவிலின் சமையல் அறையில் பல ஆண்டுகளாக ஒரு வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது, அதாவது உணவு சமைக்கும் பொது 7 பானைகளை ஒன்றிற்கு மேல் ஒன்று வைத்து சமைப்பார்கள், அதில் கடைசியாக மேலே இருக்கும் பானையில் உள்ள உணவே முதலில் வெந்து தயாராகும். இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது இந்த கோவிலின் உள்ளே நுழையும் போது அதாவது சிங்கத்வாரம் என்று சொல்லப்படும் நுழைவு வாயிலில் முதல் அடி எடுத்து வைத்தால் அப்போதே வெளியே உள்ள கடல் அலைகளின் ஓசை கேட்பது நின்றுவிடும் அனால் கோவிலில் இருந் வெளியே வரும்போது அதே இடத்தில நின்று ஒரு அடி வெளியே எடுத்து வைத்தால் கடல் அலைகளின் சப்தம் தெளிவாக கேட்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News