Kathir News
Begin typing your search above and press return to search.

தேன் போல் இனிக்கும் வேப்பம், அதிசய வேப்பமரம் உள்ள சீதளா தேவி கோயில்.!

தேன் போல் இனிக்கும் வேப்பம், அதிசய வேப்பமரம் உள்ள சீதளா தேவி கோயில்.!

தேன் போல் இனிக்கும் வேப்பம், அதிசய வேப்பமரம் உள்ள சீதளா தேவி கோயில்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 April 2020 2:16 AM GMT

திருவாரூரில் உள்ள சக்திபுரம் எனும் ஊரில் சீதளாதேவி மாரியம்மன் கோயில் உள்ளது . சீதளம் என்றால் குளிர்ச்சி என்று அர்த்தம் இங்கு வழிபடும் மக்களின் உடல் மற்றும் மன உஷ்ணத்தை போக்கும் தாய் ஆதலால் இவளுக்கு இந்த பெயர் அமைந்திருக்கிறது . வெப்பத்தை தணிக்கும் இந்த அம்மனுக்கு ஆதிபராசக்தி கமலாம்பாள் என்ற வேறு பெயர்களும் உண்டு .

இந்த கோயிலில் எந்த அம்மன் கோயிலிலும் கேள்விபடாத அதிசயம் நடக்கிறது . இந்த கோயில் வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த வேப்பமரத்தின் இலை இனிக்கிறது . இனிப்பு என்றால் ஏதோ சாதாரணமான இனிப்பு அல்ல தேன் போன்று இந்த இலை சாறு இனிப்பது அதிசயத்திலும் அதிசயமாக உள்ளது. பல விதமான ஆராய்ச்சி களுக்கு உட்படுத்தி பார்த்த பிறகும் இதன் காரணம் புரியவில்லை மேலும் இந்த இலையை கோயில் வளாகத்திற்கு வெளியே எடுத்து வந்து சாப்பிட்டால் கசக்கிறது . அம்பாளின் அருளாகவே இதை பக்தர்கள் கருதுகிறார்கள்.

இந்த கோயிலே பிரம்மாண்டமாக பரந்து விரிந்துள்ள அந்த வேப்ப மரத்தின் கீழ் தான் அமைந்துள்ளது . கோவிலின் முன்பு நாகலிங்க மரமும் அதன் கீழ் விநாயகரும் உள்ளார் இவருக்கு நாகலிங்க விநாயகர் என்றே பெயர் . அனுமனுக்கு தனி சந்நிதி உண்டு . இங்கு தாயார் இரு உருவங்களாக முன்புறம் சீதளா தேவியாகவும் அவள் பின்புறம் பெரிய மகமாயி அம்மனாகவும் காட்சி அளிக்கிறார் . இங்கு நவராத்திரி நெய் குள விழா மிகவும் பிரசித்தம் . நவராத்திரி அன்று மண்டபத்தின் நடுவில் 7 ற்கு 3 என்கிற அளவில் சதுர பாத்திரம் வைத்து அதில் சர்கரை பொங்கல் நிரப்பி நடுவில் குளம் போல் நெய் வார்த்து வழிபடுவார்கள் . இதில் அம்மன் முகம் தெரிவதாக பக்தர்கள் சொல்கிறார்கள் . இதுவே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப் படுகிறது .

இந்த தாயாரை வழிபட நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒரு ருபாய் நாணயத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து அதை அர்சகரிடம் கொடுத்தால் அவர் அதை அம்மன் பாதத்தில் வைத்து விடுவார் . விரைவிலேயே வேண்டியது நிறைவேறுகிறது . அப்படி நிறைவேறிய பிறகு அந்த காசை உண்டியலில் போட்டு விடுகிறர்கள் .

சித்திரை முதல் பங்குனி வரை இங்கு விஷேச நாட்கள் . இந்த கோயில் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை திறந்திருக்கும் .

Next Story
கதிர் தொகுப்பு
Trending News