Kathir News
Begin typing your search above and press return to search.

தீராத நோயை தீர்க்கும் அதிசய திருத்தலம் - கோவை தண்டு மாரியம்மன்!

தீராத நோயை தீர்க்கும் அதிசய திருத்தலம் - கோவை தண்டு மாரியம்மன்!

தீராத நோயை தீர்க்கும் அதிசய திருத்தலம் - கோவை தண்டு மாரியம்மன்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 April 2020 2:27 AM GMT

கோவை நகரின் மையப்பகுதியில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் தண்டுமாரியம்மன் காலம் காலமாக தீராத நோய்களையும் தீர்த்து வைத்து மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அபிஷேக நீர் எல்லா நோய்களையும் தீர்க்கிறது. தண்டுக்கீரையை அரைத்து அதில் வரும் சாற்றை அம்மனுக்கு அபிஷேகம் செய்து நாம் பருகினால் மருத்துவர்களால் கைவிடபட்ட நோய் கூட விலகுகிறது. கோவையின் மைய பகுதியில் வேப்ப மரம் மற்றும் தொரட்டி மரத்தின் நிழலில் வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறார் துர்கா தேவியின் அம்சமான இந்த தாயார் .

திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி கோவை கோட்டையில் முகாமிட்ட போது படை வீரன் ஒருவன் கனவில் தோன்றி தன்னை பிரதிஷ்டை செய்யுமாறு கட்டளையிட்டாள். பிறகு அந்த வீரர் அம்பாள் காட்டிய இடத்தில் வேப்பமரமும் காட்டுக் கொடியும் தொரட்டை மரமும் உள்ள பகுதியில் உள்ள நீர் சுனையின் அருகே அம்மனை கண்டெடுத்து அங்கே ஒரு மேடை போல் அமைத்து பிரதிஷ்டை செய்தார்கள்.

இப்படி அங்கு தங்கியிருந்த படைவீரர்களுக்கு ஒரு முறை அம்மை நோய் வந்து விட அருகில் இருந்த காய்ந்த தண்டு கீரைகளை பறித்து அதை அரைத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து குடித்த போது நோய் குணமானது. இதே வழக்கம் ஒவ்வொறு ஆடி மாதமும் இந்த தண்டு கீரை சாறை கூழுடன் சேர்த்து பருகுகிகார்கள். எப்பேர்பட்ட வியாதியையும் இது போக்குவதாக மக்கள் நம்புகிறார்கள்.

அன்றைய காலகட்டத்தில் பிளேக் காலரா போன்ற கொடிய நோய்கள் கூட்டம் கூட்டமாக ஜனங்களை கொன்று வந்த வேளையில் இந்த அம்மன் திருநீறு மற்றும் வேப்பம் இலை மூலம் பக்தர்களை காத்திருக்கிறாள். தண்டு மாரியம்மன் சன்னதிக்கு மேற்புறம் அரச மரத்தடியில் கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார். இவரை ராஜகணபதி என்று அழைக்கிறார்கள்.

இந்த கோயிலின் தல விருட்சமான தொரட்டி மரம் சக்தி வாய்ந்தது. இந்த மரம் முன்பு விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்யம் கிடைக்கிறது.

இந்த அன்னையின் அருளால் திருமணம் நடந்து மற்றும் குழந்தை கிடைக்க பெற்ற ஏராளமானோர் உலோக விழிகளையும் வெள்ளியாலான பொம்மையையும் செலுத்தியுள்ளனர்.

Next Story