Begin typing your search above and press return to search.
கோடிகளை சம்பாதித்த 'ஃபேமிலி' குறும்படம்.!
கோடிகளை சம்பாதித்த 'ஃபேமிலி' குறும்படம்.!

By :
ஊரடங்கில் வீட்டிற்குள் இருப்பதை வலியுறுத்தும் விதமாக அமிதாப்பச்சன், ரஜினி காந்த், சிரஞ்சீவி, மோகன்லால் ஆகியோர் நடிப்பில் 'ஃபேமிலி' என்ற குறும்படம் அவரவர்கள் வீட்டிலேயே படம்பிடிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதனை சோனி நிறுவனம் தனது தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தது. கல்யாண் ஜுவல்லர்ஸ் மற்றும் சோனி தொலைக்காட்சி இனைந்து தயாரித்த இக்குறும்படம் 12 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அந்த பணத்தை அனைத்து மாநில திரையுலக சினிமா தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதில் ஃபெப்சிக்கு 2.7 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருவருக்கு 1500 ரூபாய் வீதம் 18000 ஃபெப்சி தொழிலாளர்களுக்கு பிக் பஸார் கூப்பன்களாக வழங்கவிருப்பதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
Next Story