'சிறுவாபுரி' முருகனை சுற்றி வந்த பிரபல இயக்குனர் ! காரணம் என்னவோ.?
'சிறுவாபுரி' முருகனை சுற்றி வந்த பிரபல இயக்குனர் ! காரணம் என்னவோ.?

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தீவிர முருகபக்தர். கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ஞாயிற்று கிழமை காலை வேளையில் சென்னை- திருப்பதி சாலையில் பெரியபாளையத்தம்மன் கோவிலையும் தாண்டி சற்றே உள்ளடங்கியுள்ள சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி சத்தம் இல்லாமல் சென்று சாமி தரிசனம் செய்து அர்ச்சகர்கள் அணிவித்த மாலையும் கழுத்துமாக பிரகாரத்தை சுற்றி வந்துள்ளார்.
கோவிலில் தன்னை ரசிகர்கள் அடையாளம் கண்டு ஆட்டோகிராப், செல்பி ... என அன்பு தொல்லை கொடுப்பதற்குள் உஷாராகி அவசர அவசரமாக கார் ஏறி சென்னை பறந்திருக்கிறார் முருகதாஸ்.
சிறுவாபுரி முருகன் கோவில் நகரத்தார் எனப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார்களால் சென்னை பகுதிவாசிகளுக்கு மிகவும் பிரசித்தம். மேலும் , இக்கோவிலில் வீடு கட்டுதல் , திருமணம் நடத்தல் உள்ளிட்ட வேண்டுதல்கள் உடனடியாக பலிக்கும் என்பது ஐதீகம்.
'சொந்த வீடு, திருமணம் இரண்டும் பூர்த்தியான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இனி கதை திருட்டு பிரச்சினைகளில் சிக்கக்கூடாது என்பது வேண்டுதலா .?! இல்லை, ஏற்கனவே சிக்கிய கதை திருட்டு பிரச்சினைகளில் இருந்து மீண்டதற்கான நேர்த்திக்கடனா ..?! ஏ.ஆர். முருகதாஸுக்கும், அந்த சிறுவாபுரி முருகனுக்குமே வெளிச்சம்!' என கிசுகிசுத்தப்படி சென்றனர் ஏ.ஆர்.முருகதாஸை அடையாளங்கண்டும் அவரது அவசர அவசரத்தால் அருகில் சென்று ஆட்டோகிராப் வாங்க முடியாது திரும்பிய பக்தர்கள் சிலர்.