Kathir News
Begin typing your search above and press return to search.

#காணொளி: 1990ல் அயோத்தியில், முலாயம் சிங் யாதவ் உத்தரவின் கீழ் கரசேவகர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு.!

#காணொளி: 1990ல் அயோத்தியில், முலாயம் சிங் யாதவ் உத்தரவின் கீழ் கரசேவகர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு.!

#காணொளி: 1990ல் அயோத்தியில், முலாயம் சிங் யாதவ் உத்தரவின் கீழ் கரசேவகர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2020 9:25 AM GMT

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு, 1990 நவம்பர் மாதத்தில் உத்திர பிரதேசத்தின் முதல்வராக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இருந்தார். அப்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து அங்கே கூடியிருந்த கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். பல கரசேவகர்களின உயிரைப் பறித்த இந்த உத்தரவிற்கு பிறகு அவருக்கு 'முல்லா முலாயம்' என்ற பட்டப்பெயர் வந்து சேர்ந்தது.

உத்தரபிரதேச போலீசாரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டாலும், அந்த எண்ணிக்கை இன்னும் மிக மிக அதிகம் என நம்பப்படுகிறது. விசாரணையின் போது கொல்லப்பட்ட ஹிந்துக்கள் அவர்களுடைய மத நம்பிக்கைகளின்படி எரிக்கப்படக்கூட இல்லை என்றும் புதைக்கப்பட்டனர் என்று ரிபப்லிக் டிவி நடத்திய விசாரணையில் கூறப்பட்டது. போலிஸார், கரசேவகர்களைத் தாக்கிய வீடியோ காணொளிகள், ராம பக்தர்களை எவ்வாறு அவர்கள் துரத்திச் சென்று கொடூரமாக கொன்றனர் என்று காட்டுகிறது.



மேற்கண்ட வீடியோவில் போலீசார், கரசேவகர்களுக்கு மிகவும் மோசமான காயங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடனே அவர்களை சுட்டது தெளிவாக தெரிகிறது. துரத்தப்படும் போதும், கொல்லப்படும் போதும் கூட கரசேவகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்ற என்ற கோஷங்களை எழுப்புவதும் தெளிவாக தெரிகிறது. முலாயம் சிங் யாதவின் உத்தரவுக்கு கீழே போலீசார் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டனர்.

இந்த வீடியோவில் கரசேவகர்களின் இறந்த சடலங்கள் சாலைகளில் கிடந்ததும், அவைகளில் ரத்த ஆறு ஓடியது தெரிகிறது. இந்த வீடியோவின் தரம் மிகவும் தெளிவாக இல்லை என்றாலும் 1990 கொடூரங்களை புரிந்து கொள்ள போதுமானதாகும். ஒரு துறவி இந்த வீடியோவில் நூற்றுக்கணக்கானவர்கள் போலிஸ் துப்பாக்கிச் சூட்டினால் இறந்ததாகக் கூறுகிறார்.

இந்த வீடியோக்களில் மக்கள், போலீசார் வீடுகளில் நுழைந்து கரசேவகர்களை பிடிப்பதற்காக வந்ததாக கூறுகிறார்கள். பக்தர்கள் அழுது கொண்டு புலம்புவதை இந்த வீடியோ தெளிவாக காட்டுகிறது. இதயத்தை உருக்கும் காட்சியாக ஒரு பக்தர் அந்த இடத்தில் என்ன நடந்தாலும், எவ்வளவு தியாகங்கள் செய்ய வேண்டி இருந்தாலும் தாங்கள் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று கூறுவதும் கேட்கிறது.

தயவு தாட்சண்யமின்றி, முலாயம் சிங் யாதவின் உத்தரவின் பேரில் நடந்த இத்தகைய கொலைகள் எந்த அளவுக்கு கொடூரமானவை என்று 1992 6, டிசம்பரில் தான் உணரப்பட்டது . அப்போது பா.ஜ.க முதல்வராக இருந்த கல்யாண்சிங், ஒரு தோட்டா கூட கர சேவகர்களின் மீது படக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். 1990ல் நடந்த துப்பாக்கிச் சூட்டின் கோர முகம் மிகவும் பெருவாரியாக அறியப்பட்டாலும் அதன் மீது ஒரு அமைதி போர்வை போர்த்தப்பட்டு கர சேவகர்களின் படுகொலை உண்மைகள் மறைக்கப்படுகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News