Kathir News
Begin typing your search above and press return to search.

இவற்றையெல்லாம் கடந்தால், எட்டி விடும் தூரம் தான் வெற்றி.!

இவற்றையெல்லாம் கடந்தால், எட்டி விடும் தூரம் தான் வெற்றி.!

இவற்றையெல்லாம் கடந்தால்,  எட்டி விடும் தூரம் தான் வெற்றி.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 April 2020 7:57 AM IST

உலகளவில் உளவியல் ரீதியாக மனிதர்களை அதிகம் அவதிக்குள்ளாக்கும் பத்து காரணங்களை இணையத்தில் பட்டியலிட்டிருக்கிறார்கள்...

பட்டியலோடு நிற்பதல்ல நம் நோக்கம். வாழ்வின் வருத்திற்க்கான காரணங்கள் பகிரங்கமாக வெளியிடப்படும்பொழுது, அது நமக்கு பொருந்தும் என்ற விழிப்புணர்வு நமக்கு இருக்குமேயானால் அதிலிருந்து மீளும் வழியை கண்டடைய முடியும்.

உலகில் அனேக மனிதர்களை வருத்தத்திற்க்கு உள்ளாக்குவது கசப்பான உறவுகளிடம் சமரசம் காணாமை. நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் மீதும், உறவுகள் மீதும் நமக்கிருக்கும் கசப்புகளை வாழ்வின் கடைசிநிமிடம் வரை சுமப்பவர்கள் ஏராளம். வாழ்வில் கொண்டாடபடவேண்டிய நினைவுகளும், தருணங்களும் சமாதனம் காணாத வித்தியாசங்களால் தொலைந்தபோகக்கூடும்.

கோபத்தை, உறவுகளில் தோல்விகண்டு வெறும் சண்டைகளை வெல்லும் முனைப்பை கைவிடுதலே இந்த வருத்தத்திலிருந்து வெளியேறும் சிறந்த வழி.

உலக மக்களின் வருத்தங்களில் இரண்டாம் இடம் பெற்றிருப்பது, குடும்பத்திற்கு நேரம் செலவிட இயலாமை. பெரும்பாலான நேரங்களில் வேலை நம் குடும்பத்தினரின் மகிழ்ச்சியை குலைக்கும் ரூபத்தில் வரும். மனைவியிடம், கணவரிடம், குழந்தைதளிடம் இந்த வேலைபழு ஒருவித புறதூரத்தை உருவாக்கலாம். உணர்வுரீதியாக பல அழுத்தங்களை கொண்டுவரலாம்.

சரியான திட்டமிடல், குடும்பத்தின் நேரத்தை முழுமையாக ஆக்ரமித்து நாம் ஈட்டியிருக்கும் வெற்றியும், பொருளும் அவர்களின் நல்வாழ்வுக்காகவே.... ஆனால் அவர்களின் நல்வாழ்விற்க்கு நம் உடனிருப்பும் வெகு அவசியம் என்ற விழிப்பும் இந்த சவாலை தாண்டவல்ல சிறந்த வழிகள்.

மூன்றாவது, விரும்பிய வேலையை செய்ய முடியாதது விரும்பிய பட்டத்தை பெற வருடகணக்கில் கல்லூரிக்கு செல்வது இயல்பாகவே ஒரு மனிதரை தன் கனவு வேலை குறித்து கனவு காண வைத்துவிடுகிறது. ஆனால் குடும்பம் அல்லது பொருளாதார சூழல் காரணமாக கிடைக்கிற வேலையில் அமர்கிற போது.... கைகளை சம்பளம் நிறைத்தாலும் நாளின் இறுதியில் விரும்பிய வேலை இல்லையே என மனம் நிரம்ப மறுக்கும் இந்த வருத்தம் தான் உலக வருத்தங்களில் மூன்றாவது இடம்.

பணத்தை புறந்தள்ளும் துணிச்சலும், இதனால் ஏற்படும் சவால்களை, விளைவுகளை எதிர்கொள்ளும் மனதிடமும் இருந்தால் இந்த கட்டத்தை தாண்டுவது சுலபம்.

நான்காவது குடும்ப வாழ்வின் நீட்சி, நவீன கலாச்சாரத்தில் குழந்தைகள் நம் இலக்குகளின் மீதான கவனத்தை குறைப்பவர்களாக, நாம் நிகழ்த்த வேண்டிய சாதனைகளுக்கு தடையாக இருப்பவராக சித்தரிக்கப்படுகிறார்கள். எனவே இளைஞர்கள் குழந்தைகள் குறித்த தங்கள் விருப்பங்களை, சிந்தனைகளை தள்ளி வைக்கிறார்கள். வாழ்வின் ஆரம்பகட்டத்தில் இது சரியானது போல தோற்றமளித்தாலும் வாழ்வின் பிற்பாதியில் தனிமையும், நம் வெற்றியும் மகிழ்ச்சியும் யாருக்கானது என்ற தத்துவார்த்த பார்வையும் பெரும் வருத்தமாக மாறுகிறது என்கின்றன ஆய்வுகள்.

இவ்வாறு நீள்கிறது பட்டியல்

எனவே இதுபோன்ற உளவியல் ரீதியான முடிவுகளை ஒருமுறைக்கு பலமுறை, குடும்பத்தினருடன் ஆராய்ந்து எடுப்பதே சரியானது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News