மாஸ்க்குகளை இலவசமாக வழங்கி அசத்தும் புதுவை போலீசார், குவியும் பாராட்டுகள்
மாஸ்க்குகளை இலவசமாக வழங்கி அசத்தும் புதுவை போலீசார், குவியும் பாராட்டுகள்

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சுற்றுலாப்பயணிகளுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கி அசத்திய புதுச்சேரி போலீசார்.
பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனிடையே புதுச்சேரி காவல்துறை மற்றும் நே வேஸ்ட் புட் இன் பாண்டிச்சேரி (No Waste Food In Pondy) சார்பில் கொரோனா வைரஸ் குறித்து சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவசமாக மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி காவல்துறை கண்காணிப்பாளர் மாறன் கலந்துகொண்டு போலீசார், சுற்றுலாப்பயணிகள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.