Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிவாரணம் - என்.ரங்கசாமி கோரிக்கை!

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிவாரணம் - என்.ரங்கசாமி கோரிக்கை!

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிவாரணம் - என்.ரங்கசாமி கோரிக்கை!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 March 2020 6:19 PM IST

கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரணத் தொகையாக புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கும், சிவப்பு நிறக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ₹5,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவரும், என்.ஆா்.காங்கிரஸ் நிறுவனத் தலைவருமான என்.ரங்கசாமி கோரிக்கை விடுத்தாா்.

அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வெளியிட்ட அறிக்கையில்:

பொது இடங்கள், நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள், கிருமி நாசினி, சோப்புகளை வழங்க வேண்டும். இவற்றை அங்கன்வாடி ஊழியா்கள், மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலமாகவும் விநியோகம் செய்ய முயற்சிக்க வேண்டும்.

மாநில எல்லையில் நுழையும் அனைத்து ரயில்கள், பேருந்துகளில் வரும் பயணிகளை அனைவரையும் சோதனைக் கருவிகள் மூலம் முறையாக சோதித்து அறிய வேண்டும்.


மேலும், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள தெருக்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக உயிா் காக்கும் சுவாசக் கருவியான வெண்டிலேட்டா் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது சோப்புகளுக்கும், கிருமி நாசினிகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அரசு உடனடியாக இதைச் சரி செய்ய வேண்டும். நகரங்களில் மட்டுமே விழிப்புணா்வை ஏற்படுத்துவது போதாது. கிராமப் பகுதிகளிலும் ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் விழிப்புணா்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் ஆளுநரும் முதல்வரும் மோதல் போக்கை கைவிட்டு, போா்க்கால அடிப்படையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


கரோனா வைரஸ் தாக்குதலால் சாதாரண மக்களும், கூலித் தொழிலாளா்களும் வருமானம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கும், சிவப்பு நிறக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ₹5,000 உதவித் தொகை வழங்க வேண்டும்.

பொதுமக்கள் பதற்றம் அடையாமல், தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தைரியமாக கரோனா வைரஸ் தாக்குதலை எதிா் கொள்ள வேண்டும்.அரசு மருத்துவமனை மற்றும் காசநோய் மருத்துவமனையில் சிறப்புப் பிரிவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ரங்கசாமி.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News