நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பொருள்கள் விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், சரக்கு மற்றும் பார்சல் ரெயில் சேவைகள் தொடர்கிறது !
நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பொருள்கள் விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், சரக்கு மற்றும் பார்சல் ரெயில் சேவைகள் தொடர்கிறது !

கோவிட்-19 ஊரடங்கைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளின்படி சொகுசு ரெயில்கள், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயில்கள், புறநகர் ரெயில்கள், கொல்கத்தா மெட்ரோ ரெயில், கொங்கன் ரெயில்வே உட்பட அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் மே 3, 2020 வரை ரத்து செய்யப்படுகின்றன.
நாட்டின் பல பகுதிகளுக்கும் இன்றியமையாத பொருள்கள் விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், சரக்கு மற்றும் பார்சல் ரெயில் சேவைகள் தொடரும்.
அடுத்த அறிவிப்பு வரும் வரை இ-டிக்கெட்டுகள் உட்பட எந்தவிதமான பயணச்சீட்டுகளுக்கும் முன்பதிவு இருக்காது. ஆனால், ஆன்லைனில் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணச் சீட்டுகளை ரத்து செய்வதற்கான வசதி தொடரும். UTS & PRS -க்கான பயணச்சீட்டு முன்பதிவு கவுன்ட்டர்கள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்பட்டு இருக்கும்.
ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கு முன்பதிவு செய்திருந்தால் அந்தப் பயணச் சீட்டுகளுக்கான முழுக் கட்டணமும் திருப்பித் தரப்படும். இதுவரை ரத்து செய்யப்படாத ரெயில்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்து அதை ரத்து செய்தாலும் முழுக்கட்டணமும் திருப்பித் தரப்படும்.
மே 3, 2020 வரை ரத்து செய்யப்பட்ட ரெயில்களைப் பொறுத்து, ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு கட்டணத்தொகையை ரெயில்வே தானாகவே திருப்பிச் செலுத்திவிடும். பயணச்சீட்டுகளை கவுன்ட்டர்களில் வாங்கி இருந்தால், கட்டணத்தை ஜுலை 31, 2020 வரை திருப்பிப் பெற்றுக் கொள்ளலாம் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.