Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் நாளை பேருந்துகள் இயங்காது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி!

தமிழகத்தில் நாளை பேருந்துகள் இயங்காது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி!

தமிழகத்தில் நாளை பேருந்துகள் இயங்காது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 March 2020 10:40 AM IST

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்க மத்திய - மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா பரவலை தடுக்க பிரதமர் நேற்று முன்தினம் அறிவுறுத்திய 9 அம்ச நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி நாளை நடைபெற உள்ள சுய ஊரடங்கு போது காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு போக்குவரத்து கழகங்களில் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள்,அரசு மற்றும் தனியார் நூலகங்கள் இயங்காது என அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வோடு, பணியாற்றுபவர்களுக்கு நாளை மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி கூறியபடி, கை தட்டி! பொதுமக்கள் நன்றியை தெரிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News