Kathir News
Begin typing your search above and press return to search.

இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது முடக்கத்தின் போது அனைத்து ஆதரவையும் அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளது: உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா

X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 March 2020 9:24 AM IST

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அறிவுறுத்தல்களின் படி, இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது முடக்கத்தின் போது அனைத்து ஆதரவையும் அளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக, கோவிட் 19 பரவலைத் தடுக்க இன்று நாட்டின் தயார் நிலையை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து சாத்தியமான உதவிகளையும் அளிக்க மோடி அரசு உறுதியாக உள்ளதால், தற்போதைய பொது முடக்கத்தின் போது தங்களது மாநிலங்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் அல்லது திரும்ப உத்தேசித்துள்ள இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் / யாத்ரீகர்கள் போன்றவர்களுக்காக நிவாரண முகாம்களை அமைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் மீண்டும் ஒரு முறை கடிதம் எழுதியுள்ளார்.

கீழ்கண்டவற்றை ஒலி பெருக்கிகள், தொழில்நுட்பம், தன்னார்வலர்கள் மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களின் சேவையை பயன்படுத்தி விரிவான விளம்பரம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

(i) நிவாரண முகாம்களின் இருப்பிடம் மற்றும் அங்கு கிடைக்கும் வசதிகள்.

(ii) பிரதான் மந்திரி பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தின் (கரிப் கல்யாண் யோஜ்னா) கீழ் உள்ள நிவாரணத் தொகுப்பு மற்றும் மாநில அரசு நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News