இன்று ஒருவேளை உணவருந்தாமல் நம் இல்லங்களில் விளக்கேற்றுவோம் - படுகொலை செய்யப்பட்ட இந்து துறவிகளுக்கு அஞ்சலி செலுத்த H.ராஜா கோரிக்கை!
இன்று ஒருவேளை உணவருந்தாமல் நம் இல்லங்களில் விளக்கேற்றுவோம் - படுகொலை செய்யப்பட்ட இந்து துறவிகளுக்கு அஞ்சலி செலுத்த H.ராஜா கோரிக்கை!

மகாராஷ்டிரா மாநிலம் பல்காரில் படுகொலை செய்யப்பட்ட இந்து துறவிகளுக்கு அமைதியாக அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒருவேளை உணவருந்தாமல் நம் இல்லங்களில் விளக்கேற்றுவோம் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் H.ராஜா கூறியுள்ளார்.
மும்பைக்கு அருகில் உள்ள கிராமமான பால்கரில், திருடர்கள் என்று சந்தேகித்துக் கொண்டு 2 சாதுக்கள் உட்பட மூன்று பேர் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். குழந்தைகளை கடத்திச் செல்ல அவர்கள் வந்திருப்பதாக பரப்பப்பட்ட வதந்திகளின் அடிப்படையில் இரண்டு சாதுக்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் தாக்கப்பட்டனர்.
இறுதிச்சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து நாசிக் நோக்கி பயணித்தபோது 100-க்கும் மேற்பட்ட வெறித்தனமான கூட்டம் ஒன்று மூன்று பேரையும் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் படுகாயமடைந்த இரு சாதுக்கள் மற்றும் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் சுமார் 110 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பல்காரில் படுகொலை செய்யப்பட்ட இந்து துறவிகளுக்கு அமைதியாக அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒருவேளை உணவருந்தாமல் நம் இல்லங்களில் விளக்கேற்றுவோம் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் H.ராஜா கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பல்காரில் படுகொலை செய்யப்பட்ட இந்து துறவிகளுக்கு அமைதியாக அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒருவேளை உணவருந்தாமல் நம் இல்லங்களில் விளக்கேற்றுவோம்.@news7tamil @News18TamilNadu @polimernews @ThanthiTV @PTTVOnlineNews @sunnewstamil pic.twitter.com/KHbSI0BQYY
— H Raja (@HRajaBJP) April 28, 2020