கோவில் அர்ச்சகர்கள், ஓதுவார், இசை கலைஞர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் அளித்திட வேண்டும் : ஹெச். ராஜா கோரிக்கை
கோவில் அர்ச்சகர்கள், ஓதுவார், இசை கலைஞர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் அளித்திட வேண்டும் : ஹெச். ராஜா கோரிக்கை

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கோவில்கள் அனைத்தும் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலில் சேவை செய்பவர்களுக்கு மாத வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவிலில் சேவை புரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள், ஓதுவார், இசை கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு தமிழக அரசு மாதம் பத்தாயிரம் ரூபாய் விதம் வரும் 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் திரு ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழகத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள், ஓதுவார், இசை கலைஞர்கள், ஆகியோருக்கு மாதம் 10,000 ரூபாய் வரும் 3 மாதங்களுக்கு அறநிலையத்துறை வழங்கிட வேண்டும். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட வேண்டும்", என்று கேட்டுக்கொண்டுள்ளார்.