Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரபாகரனையும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களையும் சந்திக்க வைத்த இன்றைய பா.ஜ.க மத்திய அமைச்சர் : சுவாரசிய தகவல்..!

பிரபாகரனையும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களையும் சந்திக்க வைத்த இன்றைய பா.ஜ.க மத்திய அமைச்சர் : சுவாரசிய தகவல்..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 May 2020 4:35 AM GMT

மே 18, தமிழர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே 18 அன்று விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார்.

தற்போது, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் ஹர்தீப் சிங் புரி, பிரபாகரன் குறித்த சில தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தான் இலங்கையில் இந்திய தூதகரத்தில் பணி புரிந்த போது, பிரபாகரனை பல முறை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

1987ஆம் ஆண்டு, பிரபாகரனை புது டில்லிக்கு அழைத்து வந்து, இந்தியா-இலங்கை இடையே போடப்படும் ஒப்பந்தம் குறித்து எடுத்துறைக்க முயற்சித்ததாக தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை விமானம் மூலம், வல்வெட்டித்துறையில் இருந்து சென்னைக்கு பிரபாகரனை அழைத்து வந்து, அப்போதைய முதல்வர் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்திக்க வைத்ததாக கூறியுள்ளார்.




பிரபாகரனை புது டில்லிக்கு அழைத்து சென்று, இந்தியா - இலங்கை இடையே போடப்படும் ஒப்பந்தம் குறித்தும் விவரித்தாக தெரிவித்துள்ளார். ஆனால், அனைத்து முயற்சிகளையும் கைகொடுக்காமல் போர் மூண்டது, இறுதியில் பிரபாகரன் மே 18, 2009 அன்று கொல்லப்பட்டார் என்று கூறியுள்ளார்.

இந்த கீச்சுகளுக்கு நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர். அன்றைய மத்திய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுத்ததாகவும், அதையே தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும் விரும்பியதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

You have put the facts of the history again after long time, thanks for that Ambassador Puri 🙏👍 GOI tried hard for peaceful settlement and MGR also wanted it ! These are more important facts as falsehood are spreading by those vest interest !

பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் ஸ்வாமி இதற்கு பதில் அளிக்கையில், இந்த முயற்சிகளுக்கு பிரபாகரன் செவி சாய்க்கவில்லை என்றும் இதனால் தன் உயிரை தியாகம் செய்தார் எனவும், இதனால் இந்திய ராணுவத்தினர் உட்பட எவ்வளவு உயிர்கள் பலியாகின என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story