Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் சூறாவளிக் காற்றுடன் 4 நாட்களில் கனமழை : வானிலை மையம் அறிவிப்பு..

தமிழகத்தில் சூறாவளிக் காற்றுடன் 4 நாட்களில் கனமழை : வானிலை மையம் அறிவிப்பு..

தமிழகத்தில் சூறாவளிக் காற்றுடன் 4 நாட்களில் கனமழை : வானிலை மையம் அறிவிப்பு..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 April 2020 10:54 AM GMT

தமிழகத்தில் சில தென் மாவட்டங்களிலும், தென் மேற்கு மாவட்டங்களிலும் சில இடங்களில் இரு நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்துள்ளது. இந்த நிலையில் வெய்யில் அளவு உயர்ந்தாலும் இடை இடையே மேகம் மூடி மூடி திறப்பதால் மழைக்கான அறிகுறி என கூறப்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கான வாய்ப்பும், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், 30 - 40 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக் காற்றுடன் மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story