காலம் என்பது நேர்கோடல்ல அதுவொரு சுழற்சி - இந்து மதம் சொன்ன தத்துவம்!
காலம் என்பது நேர்கோடல்ல அதுவொரு சுழற்சி - இந்து மதம் சொன்ன தத்துவம்!

மனிதனின் மனம் இதுவரை கண்டுணரமுடியாத கணக்கு இந்துக்களின் கால கணக்கு என்று அறிஞர் "பிரக்டோஸ் சாப்ரா" கூறியிருக்கிறார். உலகின் மூன்றாவது பெரிய மதமாக இருக்கும் இந்து மதம், பெரும்பான்மை இந்துக்கள் அதாவது 95% இந்துக்கள் ஒரே நாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது புத்த, ஜைன, சிக்கிய மாதங்களுக்கு தாய் மதமாக விளங்குகிறது. மற்ற எந்த மதங்களிலும் இல்லாத ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் இங்கு ஆஸ்திகர்களும் நாஸ்திகர்களை அதாவது கடவுள் பக்தர்களும் கடவுள் மறுப்பாளர்களும் தங்களை இந்து என்று அடையாள படுத்தி கொள்ள முடியும்.
"காலம்" என்பது ஒரு நேர்கோடு அல்ல அது ஒரு "சுழற்சி" என்பதை முதன் முதலில் கண்டுபிடித்தது இந்து மதமாகும். நான்கு யுகங்களாக இந்த கால சுழற்சியை இந்து மதம் வகுத்துள்ளது.
உருவ வழிபடும் அருவ வழிபாடும் இணைந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அழியாமல் இன்றும் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்பட்டு வரும் மதம் ஹிந்து மதம் மட்டுமே! உலகின் மற்ற நாகரீகங்கள் மற்றும் கலாச்சாரங்களில் உள்ளது போல் "காலம்" என்பதை பற்றிய அறிவை இந்து மதம் மிக துல்லியமாக உணர்ந்துள்ளது.
இந்து மதம் அத்தகைய ஒரு பரந்த நோக்கம் கொண்டதாக இருக்கிறது, அடிப்படையில் ஓர் இறை கோட்பாட்டை கொண்ட மதமாக இருந்தாலும் உருவ வழிபாட்டை இந்து மதம் ஆதாரமாக கொண்டுள்ளது. இந்து மதம் அல்லது சனாதன தர்மம் என்று சொல்லப்படுகிற இந்து மார்கம் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கடைபிடிக்கும் மதம் ஆகும். இந்து மதத்திற்கு நிறைய தனித்துவங்கள் இருக்கின்றன.
உலகின் மற்ற மதங்களை போல் ஒரு குறிப்பிட்ட நிறுவனரோ, குறிப்பிட்ட புத்தகமோ இந்து மதத்தின் ஆதாரமான, அத்யாவஸ்யமான ஒன்றாக கருதப்படுவதில்லை, சுவாமி விவேகானந்தர் சொன்னது போல் "உண்மை யாருடைய சொத்தும் அல்ல". உண்மையை இந்து மதம் பல வழிகளில் பல பாதைகளில் அணுக கற்றுக்கொடுக்கிறது.
தாவரங்கள், மரங்கள், மிருகங்கள் என்று எல்லா உயிர்களுமே இங்கு மதிப்பு மிக்கதாக நம்பப்படுகிறது.. இந்து மதத்தில் ஓர் உயிரில் இருந்து ஆறு அறிவு வரை உள்ள எல்லா உயிர்களுமே போற்றி வணங்கப்படுகின்றன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அடக்குமுறைகளுக்கு உட்பட்டும் இன்றும் நிலைத்த நின்று கோடிக்கணக்கான மக்களால் பின்பற்றப்படும் ஒரே மதம் என்கிற பெருமையும் இந்து மதத்திற்கு உண்டு. இது போன்ற பல தனித்துவங்களை ஹிந்து மதத்திற்கு உண்டு.