ஹலோவிற்கு பதிலாக கிரஹாம்பெல் உச்சரித்த வார்த்தை எது தெரியுமா?
ஹலோவிற்கு பதிலாக கிரஹாம்பெல் உச்சரித்த வார்த்தை எது தெரியுமா?

பெல் அவர்கள் ஸ்காட்லாந்தில் பிறந்த பொழுது அவருடைய தாய்க்கு காது கேட்காது, ஆனால் நன்கு ஓவியம் வரைய கூடியவர். அவருடைய தந்தை காது கேட்காத பிள்ளைகளுக்கு எப்படி பேச வேண்டும் என்பதை கற்று கொடுக்கும் ஆசிரியராக இருந்தார். பெல் அவர்களுக்கும் அவர் தந்தையை போலவே காது கேளாத பிள்ளைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும் என்பதே விருப்பம்.
குடும்ப சூழல் காரணமாக இவர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பள்ளி படிப்பை படிக்கவில்லை. ஆனால் அதற்காகவெல்லாம் இவரின் கற்றல் நிற்கவில்லை. தாத்தா வீட்டில் இருந்த நூலகத்தில், தனியார் புத்தக சாலையில் என இவர் தொடர்ந்து கற்று கொண்டேயிருந்தார். இதற்கிடையே இவருடன் பிறந்தவர்கள் எல்லாம் காச நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வேளையில் இவருக்கும் அந்நோய் இருந்தது. சரியான நேரத்தில் ஸ்காத்லந்திலிருந்து கனடா நோக்கி குடிபெயர்ந்ததால் அந்நோயிலிருந்து மெல்ல மீண்டு வந்தார் பெல்.
இரண்டு வருடங்கள் கழித்து பாஸ்டனில் - காது கேளாத பிள்ளைகளுக்கு பேச கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஒன்றை துவங்கினார். பின்னர் பாஸ்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். அங்கே மேபல் என்ற அவருடைய மாணவியை சந்தித்தார். அவரும் காது கேளாதவர். கிரஹாம்பெல்லும், மேபலும் சந்தித்து கொண்ட 5 ஆண்டுக்கு பின் திருமணம் செய்து கொண்டனர். பெல் அவருடைய மனைவிக்கு ஏராளமான பரிசுகள் தந்தார். அதில் மிகவும் குறிப்பிடதக்கது. இன்று தொலைதொடர்பு துறையில் கோலோச்சி, உறவு ரீதியாக, தொழில் ரீதியாக முகங்கள் மறைந்து போனாலும் உணர்வுகளும், உடனடி தகவல்களும் நொடி பொழுதில் இடம் மாறுவதற்கான அடிப்படை தொலைபேசியை கண்டறியும் சமயத்தில் பெல் அவர்கள் "பெல் டெலிபோன் கம்பெனி" என்ற நிறுவனத்தை துவங்கியிருந்தார். அந்நிறுவனத்தின் சில பங்குகளை காது கேளாத அவர் மனைவிக்கு பரிசாக கொடுத்திருந்தார்.
உலகத்தின் மிக அத்தியாவிசயமான ஒன்றை கண்டுபிடித்த சாதனை நாயகன் என்றபோதும், வரலாற்றின் பக்கங்களில் மிக அழுத்தமான காலடி தடத்தை விட்டு சென்ற சரித்திர நாயகன் என்றபோதும்.. மனைவியிடம் பெற்ற உத்வேகத்தை கொண்டு சரித்திரம் படைத்து... அந்த சாதனையில் விளைந்த வெற்றியை மனைவிக்கே பரிசாக கொடுத்த அவருடைய பண்பு பிரமிக்கதக்கது.
நம் இலக்கை நோக்கி நகர்கிற போது நம்மோடு இணைகிற கைகளுக்கு பெறும் பங்குண்டு. அவ்வழியில் "தொலைபேசி" என்ற சாதனத்தின் வரலாற்று பக்கங்களில் கிரஹாம் பெல் போன்ற வெற்றியாளரின் துணை நின்றதாலேயே இன்று பெரும் புகழ் பெற்றவர் கிரஹாம்பெல்லின் உதவியாளரான வாட்சன். கிராஹாம் பெல்லின் கண்டுபிடிப்புகளுக்கு மாதிரிகளை கட்டமைக்கும் பணியினை வாட்சன் செய்து வந்தார்.
ஒரு நாள் இருவரும் பணியாற்றி வந்தபோது.. எதிர்பாராத விதமாக கிரஹாம்பெல்லிற்க்கு அங்கிருந்த வயர்கள் (wire) கள் மூலம் சப்தம் கெட்டது. அந்த சப்தம் வாட்சன் மறுமுனையில் எழுப்பிய சப்தம். அந்த சப்தத்தை கிரஹாம்பெல் பெரும் சவாலாக மாற்றினார். அந்த கண்டுபிடிப்பை மேலும் மெருகேற்றும் முயற்சியில் ஆராய்ச்சியை தொடர்ந்தார். அதற்கடுத்த நாள்..... உலகின் மிக முக்கியமான சொற்களாய் கருதப்படும், வரலாற்றில் மிகவும் பிரசத்தி பெற்ற வார்த்தைகளான "திரு. வாட்சன் இங்கே வாருங்கள். நான் உங்களை பார்க்க வேண்டும்" (Mr. Watson -- come here -- I want to see you.)என்ற சொற்கள் தான் முதன் முதலில் தொலைபேசியில் பகிர்ந்து கொள்ளபட்ட செய்தி. இச்செய்தியை கிரஹாம்பெல்லின் மார்ச் 10, 1876 ஆம் ஆண்டின் டைரி குறிப்பு உறுதி செய்கிறது.
வெற்றிகளும், சாதனைகளும் திறமை, முயற்சி இவற்றின் அடிப்படையில் மட்டும் கிடைப்பதல்ல என்பதற்க்கு கிரஹாம்பெல் ஒரு சாட்சி. காரணம்.. நம்முடைய திறனை, நம்மிடம் இருக்கும் சக்தியை எப்படி வெளி கொணர்கிறோம் அதை எப்படி இவ்வுலகிற்க்கு கொண்டு சேர்க்கிறோம். கண் இமைக்கும் நொடி பொழுதில் வாய்ப்புகளை எப்படி வசப்படுத்துகிறோம் என்பதை பொறுத்தும் தான் வெற்றிகள் அமைகின்றன. இதற்கு தக்க உதாரணம் கிரஹாம்பெல்.
தான் கண்டுபிடித்த சாதனத்தின் கண்டுபிடிப்பு உரிமத்தை பதிவு செய்ய முனைந்தார் கிரஹாம்பெல். மனிதர்களின் பேசும் ஓசையை வையர்களின் மூலம் இடமாற்றம் செய்யும் ஆராய்ச்சியில் பல விஞ்ஞானிகள் அப்போது ஈடுபட்டிருந்தது கிரஹாம் பெல் அறிந்ததே. அதனால் அதை கண்டு பிடித்ததற்கான உரிமத்தை மிக விரைவாக வாங்க வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்புடன் இருந்தார் அவர்.
ஆண்டனியோ மியுசி, எலிசா கிரே போன்றோரும் கிரஹாம்பெல்லை போல் தொலைபேசி சாதனத்தை கண்டுபிடித்திருந்த வேளையில்...எலிசாவும் என்ற விஞ்ஞானியும், கிரஹாம்பெல்லும் தொலைபேசி கண்டுபிடிப்புக்கான உரிமத்தை பதிவும் செய்யும் அலுவலகத்திற்க்கு சில மணி நேர வித்தியாசத்தில் வந்தடைந்தார்களாம். அந்த சில மணி நேர வித்தியாசம் இன்று வரலாற்றையே மாற்றியுள்ளது. அந்த மிக சிறிய இடைவெளியில் உரிமத்தை முதலில் பதிவு செய்தவர் கிரஹாம்பெல். அவர் பதிவு செய்தது உரிமத்தை மாத்திரம் அல்ல. சரித்திரத்தை.
அதன் பின் எலிசா சட்டபடி பல முயற்சிகள் செய்து பார்த்தும் தொலைபேசியின் உரிமத்தை கிரஹாம்பெல்லிற்க்கே வழங்கியது சட்டம்.
கிரஹாம்பெல்லிடம் உரிமம் இருந்ததால் அதை தொடர்ந்த 19 ஆண்டுகள், அமெரிகாவில் தொலைபேசியை உற்பத்தி செய்யும் உரிமையை அவரே பெற்றிருந்தார். இதன் செயல்முறையை இங்கிலாந்து அரசி விக்டோரியா அவர்களுக்கு செய்து காட்டிய போது, ராணி அவருடைய கோட்டைக்கும் சில இணைப்புகள் வேண்டும் என்றாராம். 1917 ஆம் ஆண்டு தொலைபேசி சேவை அமெரிக்காவில் நடைமுறைக்கு வந்தது.
75 ஆம் வயதில் அவர் உயிர் பிரிந்து, இறுதி சடங்குகள் நடந்த நாளில் - அவர் நினைவாய் வடக்கு அமெரிக்காவின் அனைத்து தொலைபேசிகளும் ஒலியெழுப்பாநிலையிலும், உபயோமற்றும் வைக்கபட்டது. மெளனத்திற்க்கும், சப்தத்திற்க்கும் வித்தியாசம் காணாத மனிதர் கிரஹாம்பெல்...செயற்கையாக எழும் சப்தங்கள் மட்டும் அல்லாமல், வாய் பேச முடியாதவர்களின் இயற்கையான சப்தமும் கிரஹாம்பெல்லிற்க்கு புரிந்ததால். அவரால் ஒரு ஆசிரியராக ஜெயிக்க முடிந்தது... அனைவரும் வியக்கும் பல அதிசயங்களையும் நிகழ்த்த முடிந்தது.
பி.கு: இன்று தொலைபேசியை கையில் எடுத்ததும் அனைவரும் ஹலோ என்று வாழ்த்தி கொள்கிறோமே... ஹலோவிற்க்கு பதிலாக கிரஹாம்பெல் உச்சரித்த வார்த்தை எது தெரியுமா...? அஹோய்.(Ahoy).....!
ஹலோ... அஹோய்.. உங்களுக்கு எது விருப்பம்...?