Kathir News
Begin typing your search above and press return to search.

புராண காலத்து விற்கள் எப்படி உருவாயின? - ஆச்சர்யம் தரும் தகவல்கள்.!

புராண காலத்து விற்கள் எப்படி உருவாயின? - ஆச்சர்யம் தரும் தகவல்கள்.!

புராண காலத்து விற்கள் எப்படி உருவாயின? - ஆச்சர்யம் தரும் தகவல்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2020 2:23 AM GMT

புராண கால ஆயுதங்களான வஜ்ராயுதம் என்கிற ஆயுதமும் , சார்ங்கம், காண்டீவம் மற்றும் பினாக, போன்ற விற்கள் வெல்லமுடியாத ஆயுதங்களாக கருதப்படுகின்றன, இவை ஒரு மஹரிஷியின் எலும்பில் இருந்து உருவாக்கப்பட்டவை. விருத்தாசுரன் எனும் அசுரன் ஒரு காலத்தில் தேவர்களை துன்புறுத்தி கொண்டிருந்தான். தேவலோகத்தில் இருந்த இந்திரனை அங்கிருந்து துரத்தி விட்டு ஆட்சி செய்து வந்தான், அவனை எந்த ஆயுதத்தாலும் தோற்கடிக்க முடியாததால் இந்திரன் உட்பட தேவர்கள் மஹாவிஷ்ணுவை அணுகி ஆலோசனை கேட்ட போது அவன் பிரம்மாவிடம் வாங்கிய வரத்தை தெரிவித்தார் அதாவது " எதாவது ஒரு ரிஷி மனமுவந்து தானமாக தரும் தன்னுடைய எலும்புகளால் மட்டுமே " அவனை கொல்ல முடியும் என்று தெரிவித்தார்.

அப்போது அப்படி ஒரு மகரிஷி எங்கு கிடைப்பார் என்று யோசித்த பொது நைமிசாரண்யத்தில் இருக்கும் ததீசி மகரிஷியிடம்ப் போய் கேட்குமாறு அறிவுறுத்தப்பட்டான் இந்திரன். அவரை அணுகி கேட்ட போது அவர் தயங்காமல் ஏற்றுக்கொண்டார், தான் இறப்பதற்கு முன்பு புண்ய நதிகளில் நீராட வேண்டும் என்று அவர் கேட்டதால் பூவுலகில் உள்ள 35 லட்சம் நதி தீர்த்தங்களையும் நைமிசாரண்யத்தில் வரச்செய்தான் அதன்பிறகு ததீசி மகரிஷி மகிழ்ச்சியுடன் அதில் நீராடி தன உடலை விட்டார்.

அதன் பிறகு தேவர்கள் அவரின் எலும்பை சேகரித்து பிரம்மாவிடம் கொண்டு சேர்த்தனர, பிரம்ம அந்த எலும்புகளை கொண்டு பல ஆயுதங்களை தயாரித்தார் அதில் முக்கியமானது அவரின் முதுகெலும்பை வைத்து தயாரித்த வஜ்ராயுதமாகும் இந்த வஜ்ராயுதத்தை வைத்து தான் இந்திரன் விருத்தாசுரனை கொன்றான், இந்த போர் 360 நாட்கள் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன, ததீசி மஹரிஷியின் எலும்புகளை கொண்டு மூன்று அற்புதமான ஆயுதங்கள் உருவாக்கப்பட்டன, ஒன்று சாரங்கம் எனும் வில் இதை கொண்ட ராமன் கும்பகர்ணனை கொன்றான், இரண்டாவது "பினாக" என்கிற வில் இதுக்கு பரமசிவனிடமிருந்து பரசுராமருக்கு தரப்பட்டது, பிறகு இது ஜனகரின் அரண்மனையில் வைக்கப்பட்டு ராமனால் நாண் ஏற்றும்போது உடைக்கப்பட்டது. மூன்றாவதாக காண்டீவம் எனும் வில் மஹாபாரதத்தில் அர்ஜுனனால் பயன்படுத்தப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News