Begin typing your search above and press return to search.
வேளாண் எந்திரக்கடைகள், அவற்றின் உதிரி பாகங்கள், பழுது நீக்குதல், பழுது நீக்கும் கடைகள், ஆகியவை திறந்திருக்கும் - மத்திய உள்துறை அமைச்சகம்
வேளாண் எந்திரக்கடைகள், அவற்றின் உதிரி பாகங்கள், பழுது நீக்குதல், பழுது நீக்கும் கடைகள், ஆகியவை திறந்திருக்கும் - மத்திய உள்துறை அமைச்சகம்

By :
மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே, பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி விதித்திருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உத்தரவிட்டு வருகிறது.
உள்துறை அமைச்சகம் தற்போது பிறப்பித்துள்ள நான்காவது பிற்சேர்க்கையில், பொது முடக்கக் கட்டுப்பாடுகளில் இருந்து, வேளாண் எந்திரக்கடைகள், அவற்றின் உதிரி பாகங்கள் (அவற்றின் விநியோகம் உள்ளிட்டவை), பழுது நீக்குதல், நெடுஞ்சாலைகளில் உள்ள லாரி பழுது நீக்கும் கடைகள் (எரிபொருள் விற்பனை நிலையங்களில் உள்ளவற்றுக்கு முன்னுரிமை), ஆகியவை வேளாண் உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்லும் வகையில் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, 50 சதவீத தொழிலாளர்களுடன் கூடிய தோட்டங்களைக் கொண்ட தேயிலைத் தொழிலும் இயங்கலாம் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Next Story