Kathir News
Begin typing your search above and press return to search.

முதன் முறையாக ஐ.நா வில் ஹாங்காங் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த இந்தியா - எல்லா வழியிலும் அடிவாங்கும் சீனா.! #HongKong #China #India

முதன் முறையாக ஐ.நா வில் ஹாங்காங் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த இந்தியா - எல்லா வழியிலும் அடிவாங்கும் சீனா.! #HongKong #China #India

முதன் முறையாக ஐ.நா வில் ஹாங்காங் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த இந்தியா - எல்லா வழியிலும் அடிவாங்கும் சீனா.! #HongKong #China #India

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 July 2020 6:08 AM GMT

லடாக் அருகே உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் (LAC) இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஹாங்காங்கிற்கான சீனாவின் புதிய பாதுகாப்புச் சட்டம் குறித்த கவலைகளை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியா சீனாவுக்கு எதிராக ஒரு இராஜதந்திர தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

தகவல்களின் படி, புதன்கிழமை, ஐக்கிய நாடுகளுக்கான இந்திய தூதர், ஹாங்காங்கில் சீனா அமல்படுத்தியுள்ள புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை குறித்து கேள்வி எழுப்பினார். இச்சட்டம் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை குறைப்பதாகவும், மேலும் வளர்ந்து வரும் இக்கட்டான சூழ்நிலையை சீனா முறையாக நிர்வகிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.



ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஐ.நா.வின் தூதரும் நிரந்தர பிரதிநிதியுமான ராஜீவ் குமார் சந்தர் கூறுகையில், ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிராந்தியத்தில் இந்திய சமூகம் வாழ்ந்து வருவதாகவும், இந்தியா சமீபத்திய நிகழ்வுகளை "உன்னிப்பாக கவனித்து வருகிறது " என்றும் குறிப்பிட்டார்.

ஹாங்காங்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் கூற்றுப்படி, இப்பகுதியில் கிட்டத்தட்ட 38,000 இந்தியர்கள் வாழ்கின்றனர், அருகிலுள்ள மக்காவில் ஒரு சிறிய சமூகம் உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடத்தக்கதாக இருந்தது, ஏனெனில் முதன் முறையாக ஹாங்காங்கின் பிரச்சினையையும், சர்வதேச அளவில் சீனாவுக்கு எதிராக நடந்து வரும் பெரிய அளவிலான போராட்டங்களையும் குறித்து இந்தியா தலையிட்டு கருத்து தெரிவித்துள்ளது. சுவாரஸ்யமாக, இந்தியாவின் இராஜதந்திர தாக்குதல், LACயில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் வந்துள்ளது.

முன்னதாக, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அனைத்தும் சீன சட்டத்திற்கு எதிராக அச்சம் தெரிவித்தன. இச்சட்டம் சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் நடக்கும் போராட்டங்களைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மிகவும் பிரபலமான டிக்டோக் உட்பட 59 சீன மொபைல் போன் அப்ளிகேஷன்களை மோடி அரசாங்கம் தடைசெய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது.

சீனா ஹாங்காங்கில் கொண்டு வந்த புது சட்டம்:

சீனா, ஹாங்காங்கிற்கு ஒரு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது புதிய குற்றங்களை கடுமையான தண்டனைகளுடன் அறிமுகப்படுத்துகிறது - சிறைவாசம் வரை - மற்றும் சீன பாதுகாப்புப் படைகள் ஹாங்காங்கில் சட்டப்பூர்வமாக செயல்பட அனுமதிக்கிறது.

இந்த சட்டம் சீனாவிற்கு விரிவான அதிகாரங்களை அளிக்கிறது, இது சீன ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை கோரி ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டங்களை அடக்கும் நோக்கம் கொண்டது. இந்த சட்டம் சீனாவிற்கு ஹாங்காங் எதிர்ப்பாளர்களை அழைத்து வரவும், அங்கு வழக்குத் தொடரவும் தண்டனை வழங்கவும் உதவுகிறது. இது ஹாங்காங்கில் சுயாட்சியைக் கணிசமாகக் கட்டுப்படுத்துகிறது.

புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதால், ஹாங்காங்கில் புதன்கிழமை அமைதியான போராட்டக்காரர்களை சீனா கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறைந்தது 70 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Next Story