Top
Kathir News
Begin typing your search above and press return to search.

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்த வீடு - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்!

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்த வீடு - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்!

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்த வீடு - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Feb 2019 9:30 AM GMT


அ.தி.மு.க அரசு அனைவருக்கும் வீடு என்ற தொலைநோக்கு பார்வையை எட்டிட, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையுடன் ஒருங்கிணைந்து பங்காற்றும் அனைத்து பங்களிப்பாளர்களுடன் இணைந்து சிறப்பாகச் செயல்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி, மற்ற அனைத்து அனுமதிகளும் விரைவில் வழங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


இது குறித்து மேலும் பேசிய அவர், வீடற்று வீதியில் வாழும் மக்களுக்கும், நலிந்த வருவாய் பிரிவினருக்கும், குறைந்த வருவாய் பிரிவினருக்கும் நேரடியாக வீட்டு வசதி அளிப்பதில் அரசு பெரும் பங்காற்றி வருகிறது. அதே சமயத்தில், மத்திய வருவாய் மற்றும் உயர் வருவாய் பிரிவினருக்கான வீட்டு வசதி அளிப்பதில் தனியார் வீட்டு வசதி அமைப்புகள் பெரும்பங்காற்றி வருகின்றன. மக்களுக்கு தேவையான வீட்டு வசதியை வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசைப் பகுதி மாற்று வாரியம் போன்ற அரசு வீட்டு வசதி அமைப்புகளே, முழுமையாக ஈடுசெய்திட முடியாது அதற்கு தனியார் நிறுவனங்களின் பங்கும் கணிசமாக தேவை என்பதை உணர்ந்த காரணத்தால், தனியார் துறை கட்டுமான வீட்டுவசதி அமைப்புகளை வெகுவாக ஊக்கப்படுத்தி வரப்படுகிறது.


வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் போதிய, பாதுகாப்பான, வாங்கும் திறனுக்கேற்ற வீட்டுவசதியும், அடிப்படை வசதிகளும் கிடைக்க வழிவகை செய்வதுடன், குடிசைப் பகுதிகளை மேம்படுத்தும் இலக்கினை அடைவதற்காக மாநில நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் குடியிருப்புக் கொள்கையை அம்மாவின் அரசு விரைவில் வெளியிடும்.ஏழைகளுக்கு வீட்டுவசதியை ஏற்படுத்த, 2014-15-ஆம் ஆண்டிலிருந்து ₹26,601.02 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் வாழும் 5.85 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஆற்றங்கரையோரம் வசித்து வரும் ஏழைக் குடும்பங்களுக்கு, மிகச் சிறந்த மறு குடியமர்த்தும் நடைமுறைகளைப் பின்பற்றி, உலக வங்கி உதவியுடன், ₹4,647.50 கோடி செலவில், 38,000 குடியிருப்புகளை அமைப்பதற்காக ‘நகர்ப்புற ஏழை மக்களுக்கான தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும். சென்னை தவிர்த்த, இதர நகர்ப்புறப் பகுதிகளில் வீட்டுவசதியினை வழங்குவதற்கும், நகர்ப்புற ஏழைகளுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில் தொழிலக மற்றும் வாடகை வீட்டுவசதியினை போதுமான அளவில் உருவாக்குவதற்கும், நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வீட்டுவசதித் திட்டத்தை ₹5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கும், ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவி கோரப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.




Next Story