கடினமான சூழலில் அழாமல் இருப்பது எப்படி?
கடினமான சூழலில் அழாமல் இருப்பது எப்படி?

ஒரு சிலரை கண்ணீர் சிந்த வைக்கவே முடியாது. காரணம் அவர்கள் மனோதிடம் அதிகமுள்ளவர்களாக இருப்பார்கள். ஏன் இவர்கள் அழுவதில்லை என நாம் கூட சிந்திப்போம். காரணம் வாழ்வின் மீதான அவர்களின் புரிதல் தான். இது நமக்கு சாத்தியமில்லையா எனில் நிச்சயம் சாத்தியம் இந்த விஷயங்களை நாம் பின்பற்றினால்
கடந்த காலத்தை இயல்பாய் கடக்க வேண்டும்
மனதளவில் பலமிக்கவர்கள் அன்றைய நொடிபொழுதில் வாழ்கிறார்கள் அதற்கும் மேலாக மிக நெருக்கமான வருங்காலத்தை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். கடந்தகாலம் என்பது கட்டுபாட்டில் இல்லை. எதிர்காலம் என்பது எதிர்பார்ப்பும், யூகங்களும் நிறைந்தது என்று அவர்களுக்கு புரிகிறது. எனவே அன்றைய நொடிபொழுதில் வாழ்கிறார்கள்.
கம்பர்ட் zone இல் இருந்து வெளியேற வேண்டும்
வெற்றி என்பது நிரந்தரமல்ல அது அடுத்த இலக்கின் துவக்கம் மட்டுமே. இந்த நிதர்சனத்தை புரிந்துகொண்டு மனதளவில் பலமிக்க மனிதர்கள் தங்களின் செளகரியமான இடங்களை வெகு விரைவில் தாண்டி விடுகிறார்கள். காரணம் அது அந்த தருணத்தில் சுகமானதாக தெரிந்தாலும் தொடர்வெற்றியை யாசிக்கிற எந்த சாதனையாளருக்கும் செளகரியமான இடம் என்பது ஆபத்தான பகுதி, கொஞ்சம் தவறினாலும் குட்டை போல் நம் வெற்றிகளும், திறன்களும் ஓர் இடத்தில் தேங்கிவிடக்கூடும். எனவே சுகமான இடங்களில் இவர்கள் இருப்பதில்லை.
உங்கள் வாழ்கையில் வேறு யாரையும் அனுமதிக்காதீர்கள்
நம் முடிவை நாமே எடுக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். நம் முடிவுகளை, நமக்கான முடிவுகளை மற்றவர்கள் எடுக்க அனுமதிப்பதென்பது நம்முடைய கடமையை, பொறுப்பை ஒத்திவைப்பதற்க்கு ஒப்பானது. ஒருவருக்கு தோற்றுபோவதற்க்கு தைரியமில்லையெனில், அவர்களுக்கு போராடி வெற்றிபெறுவதற்க்கும் தைரியமில்லை என்பதே அர்த்தம் என்பதை உணர்ந்தவர்கள் இவர்கள்.
எல்லாவற்றையும் நேர்மறையாக ஏற்றுக்கொள்ளுங்கள்
மனதளவில் பலம் மிக்கவர்களுக்கும், பலமற்றவர்களுக்கும் இருக்கும் முக்கிய வித்தியாசமே, "மாற்றம் என்பது மாற்றமற்றது" என்பது குறித்த புரிதல் தான். மாற்றத்தை தவிர்க்க முடியாது என்பதை மனோபலமிக்கவர்கள் புரிந்து கொள்கிறார்கள், ஏற்றுகொள்கிறார்கள். மாற்றத்தை ஏற்றுக்கொள்ளமுடியாமல் யதார்த்தத்துடன் போராடுவது நேர மற்றும் ஆற்றல் விரியம் என்பதை நம்புகிறார்கள்.
எதிர்மறை எண்ணங்களை விட்டொழியுங்கள்
பிறர் பெறும் வெற்றி நாமும் வெற்றி பெற போகிறோம் என்பதற்க்கான பாடம். பிறர் பெறும் வெற்றிகள் நம்மை ஊக்கப்படுத்தவதற்க்காக 'இயற்கையால் நிகழ்த்தப்படுகிறது' என்பதை இவர்கள் உணர்ந்துள்ளனர்.