Kathir News
Begin typing your search above and press return to search.

நாஞ்சில் சம்பத்தை அலறவிட்ட வீடியோ ! அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லைங்கோ.!

நாஞ்சில் சம்பத்தை அலறவிட்ட வீடியோ ! அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லைங்கோ.!

நாஞ்சில் சம்பத்தை அலறவிட்ட வீடியோ ! அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லைங்கோ.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Oct 2019 2:02 AM GMT


அரசியல்வாதிகளில் மேடை பேச்சாற்றல் எதுகை மோனை என்றால் அது நாஞ்சில் சம்பத். என அனைவருக்கும் தெரியும். இன்னோவா சம்பத் என்றால் இன்னும் பிரபலம். இவர் ம.தி.முக.வின் போர்வாளாக இருந்தவர், எதோ காரணங்களால் ம.தி.மு.க விலிருந்து விலக அ.தி.மு.கவிடம் தஞ்சம் அடைந்தார் அ.தி.மு.கவின் பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா அவருக்கு இன்னோவா காரை பரிசாக அளித்தார். மக்கள் செல்லமாக இன்னோவா சம்பத் என்று அழைத்தனர்.


ஜெ மறைந்த பிறகு இன்னோவா காரை அ.தி.மு.க.விடம் கொடுத்து விட்டு அ.மு.மு.க விற்கு சென்றார். கட்சியின் பெயரில் திராவிடம் இல்லை கூறி வெளியில் வந்தார். தற்போது தமிழ் இலக்கிய கூட்டம், பட்டிமன்றம் எனத் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்


இவ்வாறு நாஞ்சில் சம்பத் இருக்க ஆபாச வீடியோ ஒன்று வாட்ஸ் அப், சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.இதில் வருவது அன்னான் நாஜில் சம்பத் என்று பரப்பி வருகின்றனர்.


இந்த வீடியோவில் இளம் பெண்ணுடன் மது அருந்துவது, அந்தப் பெண்ணுடன் மிக நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் ஒரு நிமிடத்துக்கு மேல் ஓடுகிறது,இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது தினகரன் கட்சியில் இருப்பவர்களின் வேலையா என்று சந்தேகம் கிளப்புகிறது. சமீப காலமாக தொடர்ந்து அ.ம.மு.க வில் இருப்பவர்கள் பற்றித்தான் ஆடியோ, வீடியோ, எல்லாம் வெளிவருகிறது . ஒரு வேளை இது அவர்களின் வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறியது ,“நான் அந்த வீடியோவை இன்னும் பார்க்கவில்லை. நண்பர்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். அந்த வீடியோவிற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. யாரு வீடியோவை போட்டதுனு ஆராய்வதற்கும் தேடுவதற்கும் நான் தயாராக இல்லை .


மேலும் அவர் ஸ்டைலில் புலி வேட்டைக்குப் புறப்பட்டிருக்கிறவன், எலிகளை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. என்னுடைய மனசாட்சி சுத்தமாக இருக்கிறது. எந்தவிதமான தவறுகளுக்கும் என் வாழ்க்கையில இடம் கொடுக்கவில்லை. சுமுகமாக என்னுடைய பயணம் தொடருகிறது” என கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News